பலாக்கொட்டையை பயன்படுத்தி புளிக்குழம்பு வைத்தால் சோறு, தட்டில் மிச்சம் இருக்காது. அவ்வளவு ருசியாக இருக்கும்.அதுவும் இந்த கோடை காலத்தில் பலாப்பழம் அதிகமாக கிடைக்கும். அதனை வாங்கி சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டையை தூக்கி போடாமல் வெயிலில் காய வைத்து பின் அதனை குழம்பாக செய்யலாம். அவ்வளவுதான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். விரும்பி சாப்பிடுவார்கள். இந்த பதிவில் பலாக் கொட்டையில் குழம்பு செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
பலாக்கொட்டை - 1 கப்
புளித் தண்ணீர் - 1 கப்
பூண்டு - 8 பற்கள்
கடுகு - 1/2 tsp
சீரகம் - 1/2 tsp
கறிவேப்பிலை - சிறிதளவு
மஞ்சள் - 1/4 tsp
மிளகாய் தூள் - 1/2 tsp
சாம்பார் பொடி - 2 tsp
பெருங்காயப் பொடி - 1/4 tsp
உப்பு - தே.அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
எண்ணெய் - 2 tsp
அரைக்க :
தேங்காய் - 1/2 கப்
மிளகு - 10
காய்ந்த மிளகாய் - 2
வதக்கி அரைக்க
வெங்காயம் - 1
தக்காளி - 1
தனியா - 1 tsp
எண்ணெய் - 1 tsp
செய்முறை :
1. முதலில் பலாக்கொட்டையின் தோலை நீக்கிவிட்டு குக்கரில் போட்டு 3 - 4 விசில் வர வேக வைக்கவும்.
2. கடாயை வைத்து எண்ணெய் விட்டு வதக்கி அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளுங்கள்.
3. அடுத்ததாக ஜாரைக் கழுவி மீண்டும் தேங்காய், காய்ந்த மிளகாய் என அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
4. பின் கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் சேர்த்து பொறிந்ததும் பூண்டு போடவும். பூண்டு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளி வெங்காயம் பேஸ்ட் சேர்த்து வதக்கவும்.
5. நன்கு வதங்கியதும், சாம்பார் பொடி, மிளகாய் பொடி என கொடுக்கப்பட்டுள்ள பொடிகளை சேர்த்து வதக்கவும்.
6. அடுத்து புளித்தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும். போதுமான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ளவும். ஒரு கொதி வந்ததும் வேக வைத்துள்ள பலாக் கொட்டையை சேர்க்கவும்.
7. 10 நிமிடங்கள் கொதித்ததும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவையை சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். குழம்பு உங்களுக்கு தேவையான பதத்தில் வந்ததும் கொத்தமல்லி தழைகளை நறுக்கி போடவும்.
8.அவ்வளவுதான் பலாக்கொட்டையில் புளிக்குழம்பு தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Jack Fruit