முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஒரு கப் இட்லி மாவு போதும்.. புஸ் புஸ்ஸுனு மெது வடை சுடலாம்.. ரெசிபி இதோ..

ஒரு கப் இட்லி மாவு போதும்.. புஸ் புஸ்ஸுனு மெது வடை சுடலாம்.. ரெசிபி இதோ..

மெது வடை

மெது வடை

தினமும் உளுந்து ஊற வைத்து ஆட்டி சுட்டு எடுப்பது சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிலருக்கு காலை உணவுடன் வடை , டீ, காஃபியும் இருந்தால்தான் அது முழுமையானதாக இருக்கும். அப்படி வடை சுட வேண்டுமெனில் தினமும் உளுந்து ஊற வைத்து ஆட்டி சுட்டு எடுப்பது சற்று சிரமமாக இருக்கலாம். ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். நீங்கள் இட்லி சுடும் மாவிலேயே உப்பி வரும் மெது வடை சுடலாம். எப்படி என இந்த ரெசிபியை கவனிங்க..

தேவையான பொருட்கள் :

இட்லி மாவு - 1கப்

தண்ணீர் - 1 கப்

அரிசி மாவு - 1/4 கப்

மிளகு - 10

சீரகம் - 1/2 tsp

இஞ்சி துருவல் - 1/2 tsp

வெங்காயம் - 1 கைப்பிடி

பச்சை மிளகாய் -1

கறிவேப்பிலை , கொத்தமல்லி

செய்முறை :

அடுப்பில் கடாய் வைத்து ஒரு கப் இட்லி மாவை அதில் ஊற்றுங்கள். பின் தண்ணீர் 1 கப் ஊற்றி நன்கு கிளறி விடுங்கள்.

மாவு கெட்டியாகும் போது அரிசி மாவு சேர்த்து கை விடாமல் நன்கு கிண்ட வேண்டும்.

பின் மிளகு , சீரகம், இஞ்சி துருவல் , வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை , கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும்.

உப்பு கொஞ்சமாக சேர்த்தால் போதும்.

மாவு வடை பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு இறக்கிவிடுங்கள்.

சூடு தணிந்ததும் அடுப்பில் மீண்டும் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி மாவை மெது வடை போல் தட்டி போட்டு பொன்னிறமாக சுட்டு எடுங்கள்.

top videos

    உப்பி வர தேவைப்பட்டால் சோடா மாவு ஒரு சிட்டிகை சேர்த்து கலந்துகொள்ளலாம்.

    First published:

    Tags: Evening Snacks, Food recipes