முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Eid-ul-Fitr 2023 : ரம்ஜான் பண்டிகைக்கு கம கம ஹைதரபாத் பிரியாணி செய்து அசத்துங்க.. இதோ ரெசிபி..!

Eid-ul-Fitr 2023 : ரம்ஜான் பண்டிகைக்கு கம கம ஹைதரபாத் பிரியாணி செய்து அசத்துங்க.. இதோ ரெசிபி..!

மாதிரிப்படம்..!

மாதிரிப்படம்..!

பெரும்பாலும் ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே சாப்பிட்டு பழகிய இந்த வெரைட்டியை வீட்டில் செய்வது ரொம்பவும் கடினமல்ல. எளிமையான டிப்ஸ், பக்குவமான செய்முறை ஆகியவற்றை பின்பற்றினால் நம் வீட்டிலும் கூட ஹைதராபாத் பிரியாணி கமகமவென்று மனக்கும்.

 • Last Updated :
 • Tamil Nadu, India

மாதம் ஓரிரு முறை பிரியாணி செய்வதை நீங்கள் வழக்கமாகக் கொண்டிருக்கும் பட்சத்தில், ரம்ஜான் பண்டிகையன்று செய்யும் பிரியாணி அதிலிருந்து வேறுபட்டு சிறப்புமிக்கதாக இருக்க வேண்டும் அல்லவா! இல்லையென்றால் எந்தவித சுவாரஸ்யமும் இருக்காது. ஆக, இந்த பண்டிகையை குதூகலம் மிகுந்ததாக மாற்றுவதற்கு நீங்கள் ஹைதரபாத் பிரியாணியை தேர்வு செய்யலாம்.

பெரும்பாலும் ரெஸ்டாரண்டுகளில் மட்டுமே சாப்பிட்டு பழகிய இந்த வெரைட்டியை வீட்டில் செய்வது ரொம்பவும் கடினமல்ல. எளிமையான டிப்ஸ், பக்குவமான செய்முறை ஆகியவற்றை பின்பற்றினால் நம் வீட்டிலும் கூட ஹைதராபாத் பிரியாணி கமகமவென்று மனக்கும். இப்போது ஹைதராபாத் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் ஒரு கிலோ, புளிக்காத தயிர் - ஒன்றரை கப், தனி மிளகாய் தூள் - 2 டீ ஸ்பூன், மஞ்சள் தூள் - அரை டீ ஸ்பூன், கரம் மசாலா - 2 டீ ஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டேபிள்ஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெரிய வெங்காயம் நறுக்கியது - ¾ கப் அளவு, புதினா மற்றும் கொத்தமல்லி இலை தலா அரை கப் அளவு எடுத்துக் கொள்ளவும்.

பாஸ்மதி அரிசி - 750 கிராம், குங்குமப்பூ - ஒரு சிட்டிகை, நெய் - 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், லவங்கப்பட்டை - 3, பிரியாணி இலை - 3, கிராம்பு - 3, ஏலக்காய் - 3, எலுமிச்சை பழம் - 1 எடுத்துக் கொள்ளவும்.

செய்முறை

 • சிக்கனை நன்றாக கழுவி பின்னர் அதில் தயிர், மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் பேஸ்ட், உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசறி வைக்கவும்.
 • கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை போட்டு மொறுவலாக பொறித்து எடுக்கவும்.
 • பொறித்த வெங்காயம், கொத்தமல்லி, புதினா, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சிக்கன் கலவையுடன் கலந்து 30 நிமிடம் வரை ஊற வைக்கவும்.
 • மற்றொரு பாத்திரத்தில் அரிசியை அலசி, அதையும் 15 நிமிடம் வரை ஊறவைக்கவும்.
 • பெரிய பாத்திரம் ஒன்றில் இரண்டு லிட்டர் தண்ணீர் சேர்த்து அதில் கொத்தமல்லி, புதினா, பட்டை, லவங்கம், பிரியாணி இலை, ஏலக்காய், உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
 • கொதித்த நீரில் அரிசியை அரை வேக்காடாக வேக வைத்து, பின்னர் தண்ணீரை வடித்து விடவும்.
 • அதே நீரில் அரை கப் அளவு எடுத்து அதில் குங்கப்பூவை சேர்க்கவும்.
 • மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் மேரினேட் செய்யப்பட்ட சிக்கனை வேக வைக்கவும். கொஞ்சம் வெந்தவுடன் எண்ணெய் பிரிந்து வரும்.
 • இப்போது பிரியாணி பாத்திரத்தில் அடியில் கொஞ்சம் சோறு, அதன் மீது சிக்கன் கலவை, குங்கம்ப்பூ நீர், கொத்தமல்லி, புதினா இலை, கொஞ்சம் நெய் சேர்க்கவும். இதே முறையில் 3 அல்லது 4 அடுக்குகளாக சோறு மற்றும் இதர கலவையை போட்டு தட்டு வைத்து மூடி விடவும்.
 • காற்று புகாதவாறு தம் வைத்து இறக்கினால் ஹைதாரபாத் பிரியாணி ரெடி. பரிமாறும்போது மசாலாவும், சோறும் கலந்து வரும்படி எடுக்கவும்.
top videos

  First published:

  Tags: Biriyani, Ramadan Fasting, Ramzan