முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சத்தான தினை அரிசியில் தக்காளி சாதம்... இதோ ரெசிபி..!

சத்தான தினை அரிசியில் தக்காளி சாதம்... இதோ ரெசிபி..!

தினை தக்காளி சாதம்

தினை தக்காளி சாதம்

Foxtail Millet tomato rice | பிரியாணி அரிசி, அரிசி சாதத்தில் செய்யும் தக்காளி சாதத்தை விட தினையில் செய்த தக்காளி சாதம் மிகவும் சுவையாக இருக்கும். ஆரோக்கியத்திற்கும் நல்லது.

  • Last Updated :

சிறு தானிய வகைகள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. எடை குறைக்க நினைப்பவர்கள், சர்க்கரை குறைக்க நினைப்பவர்கள், ஆரோக்கியம் தேவை என்று நினைப்பவர்கள் இந்த சிறுதானிய அரிசி வகைகளை எடுத்துக்கொள்ளலாம். இந்த தானியங்களை கொண்டு சாப்பாடு அல்லது கஞ்சிதான் வைப்பார்கள். ஆனால் இன்று சிறுதானியம் கொண்டு பல உணவு செய்யப்படுகிறது. 

அந்தவகையில் திணை அரிசி கொண்டு இன்று தக்காளி சாதம் செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

தினை - 1 கப்

வெங்காயம் - 1

தக்காளி -3

பச்சை நறுக்கியது -3

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்

சோம்பு - 1 ஸ்பூன்

பட்டை - 1

1ஏலக்காய் - 1

2 கிராம்பு - 2

1பிரியாணி இலை - 1

1அன்னாசி மொக்கு - 1

வரமிளகாய் தூள் -1 ஸ்பூன்

கரம் மசாலாத்தூள் - 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

நெய் - 1 ஸ்பூன்

தேவையான அளவு உப்பு

தேவையான அளவு எண்ணெய்

செய்முறை:

1. முதலில் தினையை நன்றாக கழுவி 10 முதல் 15 நிமிடம் ஊற வைக்கவும். ஊற வைத்த தினையை தண்ணீர் வடித்து விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. அடுப்பில் ஒரு குக்கர் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அதில் சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் அன்னாசி மொக்கு சேர்த்து சிவக்க வதக்கவும்.

3. பின் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கி விட்டு அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கி விட வேண்டும்.

Also see... பாய் வீட்டு பிரியாணி மணக்க இந்த மசாலா பொடி தான் காரணம்.. 3 பொருள் இருந்தா போதும்..!

4. பிறகு வரமிளகாய் தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும். ஒரு கப் தினைக்கு இரண்டரை கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். தண்ணீர் கொதித்தவுடன் தினை அரிசியினை சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை மிதமான தீயில் வைக்கவும்.

top videos

    5. பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு ஆவி அடங்கியதும் குக்கரைத் திறந்து பார்க்கவும். வெந்த தினை அரிசி மேல் ஒரு ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறி விடவும். அவ்ளோதாங்க ஆரோக்கியமான மற்றும் சத்தான தினை அரிசி தக்காளி சாதம் ரெடி.

    First published:

    Tags: Millets Food, Tomato