முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெறும் ஒரு கப் கோதுமை மாவு இருந்தா போதும்… சூப்பரான ஸ்வீட் செய்யலாம்!

வெறும் ஒரு கப் கோதுமை மாவு இருந்தா போதும்… சூப்பரான ஸ்வீட் செய்யலாம்!

வெறும் 20 நிமிடத்தில் தயாராகும் கோதுமை அல்வா!

வெறும் 20 நிமிடத்தில் தயாராகும் கோதுமை அல்வா!

wheat flour halwa recipe in tamil | வீட்டில் நீண்ட நாட்களாக உபயோகிக்காமல் வைத்திருக்கும் கோதுமை மாவை பயன்படுத்து ஒரு சூப்பரான ஹல்வா ரெசிபி செய்வது எப்படி என பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோதுமை அல்வா ஒரு பிரபலமான ராஜஸ்தானி உணவு வகையாகும். இது சர்க்கரை, ஏலக்காய் தூள் மற்றும் நெய் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது. ஏதாவது இனிப்பு சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு உண்மையாக இது சிறப்பான ரெசிபி.

அல்வா என்பது விசேஷ சந்தர்ப்பங்களிலும் பண்டிகைகளிலும் பரிமாறப்படும் இனிப்பு வகைகளில் ஒன்று. ஏகாதசி, நவராத்திரி, சிவராத்திரி போன்ற சமயங்களில் மக்கள் விரதம் அனுஷ்டித்து, இறைவனுக்கு இனிப்பு படைத்து வழிபடுவார்கள். அப்படி ஏதாவது புதுமையான இனிப்பு செய்ய நினைத்தால் கோதுமை அல்வாவை முயற்சியுங்க. இதற்கான ரெசிபியை நாங்கள் கூறுகிறோம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - ¼ கிலோ.

சர்க்கரை அல்லது வெல்லம் - ¼ கிலோ.

கேசரி பவுடர் - சிறிதளவு.

உப்பு - 1 சிட்டிகை.

நெய் - தேவையான அளவு.

ஏலக்காய் பொடி - 7 கிராம்.

முந்திரி - 1 கப்.

உலர் திராட்சை - 2 ஸ்பூன்.

செய்முறை :

முதலில், அல்வா செய்ய எடுத்துக்கொண்ட கோதுமை மாவினை சல்லடையில் சலித்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அதே நேரம், அல்வா செய்ய தேவைப்படும் பொருட்களை எல்லாம் தயார் நிலையில் வைக்கவும்.

இப்போது, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடேற்றவும். நெய் நன்றாக உருகியதும், இதில் முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியே எடுத்துக்கொள்ளவும்.

பின்னர், இதே கடாயில் 3 கப் தண்ணீர் (1/2 கப் கோதுமைக்கு 2 கப் தண்ணீர் என்ற விதத்தில்) சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை தொடர்ந்து இதில் கேசரி பவுடர், ஏலக்காய் பொடியினை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் நன்றாக கொதிக்கும் நிலையில் இதில் கோதுமை மாவினை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, மாவு கட்டியாகாமல் கிளறி விட வேண்டும்.

Also Read | தினமும் இந்த சத்து பானம் குடிச்சா கொலஸ்ட்ரால் குறையுமா..? ட்ரை பண்ணி பாருங்க..!

கிண்டும் போது இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்துக்கொள்ளலாம். கையை அடுப்பை விட்டு இறக்காமல் கிண்டிக் கொண்டே இருக்கவும்.

மாவு அரை கூழ்ம நிலையில் இருக்கும் நிலையில், இதில் சர்க்கரை அல்லது பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். சர்க்கரை சேர்த்தப்பின் மாவு சற்று இளகும், இதை கண்டு அஞ்ச வேண்டாம்.

top videos

    இந்த சேர்மம் சற்று திடமாக மாறும் நிலையில், இடனுடன் 3 ஸ்பூன் நெய் சேர்த்து கிளறிவிடவும். தொடர்ந்து இதனுடன், வறுத்து எடுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை ஆகியவற்றையும் சேர்த்து கிளற சுவையான கோதுமை அல்வா ரெடி.

    First published:

    Tags: Food, Food recipes, Halwa Recipe in Tamil