முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கொளுத்தும் வெயிலுக்கு இதமான தர்பூசணி மாக்டெயில் செய்வது எப்படி..?

கொளுத்தும் வெயிலுக்கு இதமான தர்பூசணி மாக்டெயில் செய்வது எப்படி..?

வீட்டிலேயே ஈஸியா செய்யலாம் வாட்டர் மெலன் மாக்டெயில்!!

வீட்டிலேயே ஈஸியா செய்யலாம் வாட்டர் மெலன் மாக்டெயில்!!

watermelon mocktail recipe in tamil | கோடை காலத்தை சமாளிக்க நாம் அதிகமாக நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில், ஆரோக்கியமான முறையில் வீட்டிலேயே வாட்டர் மெலன் மாக்டெயில் செய்வது எப்படி என பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil |

கோடைக்காலத்தில் அதிகமாக கிடைக்கும் பழங்களில் ஒன்று தர்பூசணி. ஆனால், நம்மில் பலர் தர்பூசணியை வெட்டியோ அல்லது ஜூஸ் செய்தோ குடிப்போம். ஆனால், எப்போதாவது இதை வேறு விதமாக செய்ய முயற்சி செய்ததுண்டா..?

நாங்கள் உங்களுக்கு தர்பூசணியை வைத்து ஒரு சூப்பரான வாட்டர் மெலன் மாக்டெயில் செய்வது எப்படி என கூறுகிறோம். வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து அசத்துங்கள்.

தேவையான பொருட்கள் :

தர்பூசணி பொடியாக நறுக்கியது - 2 கப்.

எலுமிச்சை பழம் - 1.

புதினா இலை - 8.

சர்க்கரை - 1 ஸ்பூன்.

சோடா - 1 கப்.

ஐஸ் கட்டிகள் - 3 துண்டு.

செய்முறை :

முதலில், மாக்டெயில் செய்ய எடுத்துக்கொண்ட தர்பூசணியை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக நறுக்கு தனியே எடுத்து வைக்கவும்.

இதை தொடர்ந்து, எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி, சாறு பிழிந்து தனியே வைக்கவும்.

இப்போது, ஒரு கண்ணாடி டம்பளரை எடுத்து அதில் சர்க்கரை மற்றும் புதினா இலைகளை போட்டு மர கரண்டியால் 5 நிமிடம் நன்றாக நசுக்கவும். அதாவது, ஒன்றுடன் ஒன்று நன்றாக சேரும் வரை பிசைந்து கொள்ளவும்.

Also Read | தொப்பையை கரைக்கும் கறிவேப்பிலை ஜூஸ்.. இப்படி போட்டு குடிங்க நல்ல ரிசல்ட் தரும்..!

இதற்கிடையில், ஒரு மிக்சி ஜாரில் பொடியாக நறுக்கிய தர்பூசணி துண்டுகளை சேர்த்து நன்றாக அரைத்து வடிகட்டி தனியே எடுத்துக்கொள்ளவும்.

புதினா உள்ள கண்ணாடி டம்ளரில் கால்பாகம் ஐஸ் கட்டி சேர்த்து, வடிகட்டி வைத்துள்ள தர்பூசணி சாறு மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றவும்.

இதையடுத்து, எடுத்து வைத்துள்ள சோடாவை சேர்த்து, மேலே தர்பூசணி துண்டு மற்றும் புதினா இலை சேர்த்தால் வாட்டர் மெலன் மாக்டெயில் தயார்.

top videos

    கூடுதல் குறிப்பு : சோடா இல்லை என்றால் செவனப் அல்லது ஸ்பிரைட் சேர்க்கலாம்.

    First published:

    Tags: Food, Food recipes, Watermelon