வீட்டில் உள்ளோருக்கு ஒரு வித்தியாசமான சுவையில் சிக்கனை சமைத்துக் கொடுக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் திருச்சி ஸ்டைல் சிக்கன் சுக்காவை செய்து கொடுங்கள். இந்த சிக்கன் சுக்கா சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இந்த ரெசிபியை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள்:
சிக்கன் - 1 கிலோ
சோம்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
அரைப்பதற்கு...
துருவிய தேங்காய் - 1 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 5
சிறிய தக்காளி - 1
கிராம்பு - 2
பட்டை - 1
சோம்பு - 1 டீஸ்பூன்
மல்லி - 1 டீஸ்பூன்
மிளகு - 3 ஸ்பூன்
செய்முறை:
1. முதலில் சிக்கனை மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்சர் ஜாரில், தேங்காய், சின்ன வெங்காயம், தக்காளி, கிராம்பு, பட்டை, சோம்பு, மல்லி மற்றும் மிளகுத் தூள் சேர்த்து, சிறிது நீரைத் தெளித்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
2. பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
3. பிறகு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கிளறி, சிக்கனை வேக வைக்க வேண்டும்.
4. சிக்கன் நீர் விட்டு நன்கு வெந்ததும், அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து சிக்கனை 15-20 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
5. 20 நிமிடம் ஆனதும் மூடியைத் திறந்து, சிக்கன் நன்கு வெந்துவிட்டதா என்று பார்த்து இறக்கி விட வேண்டும்.
6. சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவது போன்று வேண்டுமானால், சற்று கிரேவியாக இருக்கும் போதே, அடுப்பை அணைத்துவிடுங்கள். ட்ரையாக வேண்டுமானால், நீரை வற்ற வைத்து பின் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
7. இறுதியாக மேலே கொத்தமல்லியைத் தூவினால், சுவையான திருச்சி ஸ்டைல் சிக்கன் சுக்கா தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chicken Recipes