முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குக் வித் கோமாளி விசித்ரா அம்மாவின் 'தாய் சிக்கன் ப்ரை' ரெசிபி..

குக் வித் கோமாளி விசித்ரா அம்மாவின் 'தாய் சிக்கன் ப்ரை' ரெசிபி..

சுவையான தாய் சிக்கன் ப்ரை செய்வது எப்படி?

சுவையான தாய் சிக்கன் ப்ரை செய்வது எப்படி?

ஒரு முறை உங்க வீட்டு குழந்தைகளுக்கு இப்படி சிக்கன் செய்து கொடுங்க. அவங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிக்கன் நம்மில் பலருக்கும் பிடித்த உணவு. அதுவும், சிக்கன் பிரியாணி என்றால் சொல்லவா வேண்டும்… நம்மில் பலர் சிக்கன் என்றாலே குழம்பு, சிக்கன் 65, சிக்கன் கிரேவி, சிக்கன் பிரியாணி என ஒரே ரெசிபிக்களை வாரம் வாரம் செய்வோம். அது, நமது குழந்தைகளுக்கும், வீட்டில் உள்ளவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும். எனவே, இந்த வாரம் சிக்கனை வைத்து செய்யக்கூடிய ஒரு புதிய ரெசிபி பற்றி கூறுகிறோம்.

தாய்லாந்து நாட்டின் பிரபல உணவு வகையான தாய் சிக்கன் ப்ரை-யை வீட்டிலேயே மிகவும் எளிமையான முறையில் தயார் செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் துண்டுகள் - 250 கிராம்.

பால் - 1/2 கப்.

எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்.

மீன் சாஸ் - 2 ஸ்பூன்.

சோய சாஸ் - 2 ஸ்பூன்.

எண்ணெய் - தேவையான அளவு.

பெரிய சைஸ் வெங்காயம் - 1.

பீன்ஸ் - 10.

பொடி காளான் - 1 கப்.

இஞ்சி - பூண்டு விழுது - 1 ஸ்பூன்.

மிளகாய் பொடி - 1 ஸ்பூன்.

உப்பு - தேவையாள அளவு.

செய்முறை :

முதலில், ரெசிபி செய்ய எடுத்துக்கொண்ட சிக்கன் துண்டுகளை மஞ்சள் மற்றும் கல் உப்பு பயன்படுத்தி நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும். இதையடுத்து, சுத்தம் செய்த சிக்கன் துண்டுகளை பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைக்கவும்.

பின், அகன்ற பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் பால், மீன் - சோயா சாஸ், எலுமிச்சை சாறு, மிளகாய் தூள் ஆகியவற்றுடன் சிக்கன் துண்டுகள் சேர்த்து நன்கு பிசைந்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

இதனிடையே, எடுத்துக்கொண்ட காளான், பீன்ஸ், வெங்காயம் ஆகியவற்றை சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைக்கவும்.

Also Read | சர்க்கரை நோயாளிகளை காக்கும் பாகற்காய் ஜூஸ்.. ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க!

தற்போது தாய் சிக்கன் செய்ய, பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து தாளிக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதில் நறுக்கிய காளான், பீன்ஸ், உப்பு ஆகியவற்றை சேர்த்து 5 முதல் 7 நிமிடத்திற்கு வதக்கவும்.

top videos

    இறுதியாக இதில், மசாலாவுடன் ஊற வைத்த சிக்கன் துண்டுகள் சேர்த்து பதமாக வறுத்து அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான தாய் சிக்கன் ப்ரை தயார்.

    First published:

    Tags: Chicken recipe, Food, Food recipes