முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மோர் குழம்பை இப்படி வச்சு சாப்பிடுங்க... சுவை அட்டகாசமா இருக்கும்..!

மோர் குழம்பை இப்படி வச்சு சாப்பிடுங்க... சுவை அட்டகாசமா இருக்கும்..!

மோர் குழம்பு

மோர் குழம்பு

மதியம் சாப்பாட்டுக்கு சட்டென்று செய்யக்கூடிய மோர் குழம்பை செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடை வெயில் தொடங்கி விட்டது. இந்த நேரத்தில் நாம் அதிகமாக நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது மிக மிக அவசியம். அதிலும் குறிப்பாக அதிக நேரம் பைக்கில் பயணம் செய்வது போன்ற வேலைகளை செய்பவர்கள் காரசாரமான உணவை தினமும் எடுத்துக் கொள்ள கூடாது. அதே போல் சூட்டை தரும்  சிக்கன், காரம் நிறைந்த பிரியாணி உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால் பல பிரச்சனைகள் தரலாம். குறைந்தது வாரத்தில் 2 முறையாவது தயிர், மோர், கூழ் போன்ற உணவுகளை எடுத்துக் கொள்வது மிக மிக நல்லது. இந்த சம்மரில் பெரும்பாலான வீட்டில் தயிர் ஸ்டாக்கில் இருக்கும்.

தொடர்ந்து, தயிர் சாதம், மோர் சாதம் என்பதையே எடுத்துக் கொள்ளாமல் தயிர் தாளிச்சது, மோர் குழம்பு என வெரைட்டியாகவும் சாப்பிட்டால் போர் அடிக்காது. மோர் குழம்பில் பல வகையுண்டு. வெண்டைக்காய் போட்ட மோர் குழம்பு, சுரைக்காய் சேர்த்தது, கேரளா ஸ்டைல் மோர் குழம்பு, நாகர்கோவில் மோர் குழம்பு என சொல்லிக்கொண்டே செல்லாம். இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போவது நம்ம ஊர் ஸ்டைல் சிம்பிள் மோர் குழம்பு. மதியம் சாப்பாட்டுக்கு சட்டென்று செய்யக்கூடியது இந்த மோர் குழம்பு.

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு, காய்ந்த மிளகாய், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கடுகு, தயிர், பச்சை மிளகாய், மஞ்சள் தூள்

செய்முறை:

1. முதலில் 30 நிமிடம் ஊற வைத்த ஒரு கை அளவு துவரம் பருப்பை மிக்சியில் மைய அரைக்க வேண்டும்.

2. பருப்புடன் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி , சீரகம் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

3. இப்போது தயிரை மோர் போல் அடித்து,  தனியாக வைக்கவும்.

4. கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம் போட்டு தாளித்து அதில் அரைத்து வைத்துள்ள பருப்பை சேர்க்க வேண்டும்.

5. இப்போது அதில் தயிர் கரைசலை சேர்த்து தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மோர் குழம்பு பதத்திற்கு கொண்டு வர வேண்டும்.

top videos

    6. இறுதியாக கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான டேஸ்டியான 10 நிமிடத்தில் செய்யகூடிய மோர் குழம்பு தயார்.

    First published:

    Tags: Curd, Food, Summer Food