முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கோவில்பட்டி கடலை மிட்டாய் செய்ய ரெசிபி...

கோவில்பட்டி கடலை மிட்டாய் செய்ய ரெசிபி...

கோவில்பட்டி கடலை மிட்டாய்

கோவில்பட்டி கடலை மிட்டாய்

Kovilpatti Kadalai Mittai | கடலை மிட்டாய் ஜீரணத்துக்கு மிகவும் நல்லது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோவில்பட்டி என்றவுடன் நினைவுக்கு வருவது கடலை மிட்டாய் தான்,  கோவில் பட்டியில் தயாராகும் கடலை மிட்டாய்களுக்கு மட்டும் எப்படி ஒரு அட்டகாசமான சுவை கிடைக்கிறது? அதற்குக் காரணம் இந்த ஊரின் மண்வாசனை. அங்கு விளையும் தரமான கடலை மற்றும் தலைமுறைகள் தாண்டி இதை செய்யும் உற்பத்தியாளர்களின் கைப்பக்குவம் என்றே சொல்லலாம். அந்த ரெசிபியை எப்படி செய்வது என்பது பற்றி இந்த பகுதியில் தெரிந்துக் கொள்ளலாம்..

தேவையான பொருட்கள்:

வெல்லம் -1 கிலோ

நிலக்கடலை -200 கிராம்

தண்ணீர் வெல்லப் பாகை எடுக்க - சிறிதளவு

உப்பு  - சிறிதளவு

தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி- தேவைப்பட்டால்

செய்முறை

1. முதலில் நிலக்கடலையை வெறும் சட்டியில் நன்றாக வறுத்துக் கொள்ளவும்.

2. பின்னர் வெல்லப்பாகை செய்ய, வெல்லத்தை மிதமான சூட்டில் காய்ச்ச வேண்டும். காய்ச்சி பின்பு சிறிது நேரம் பாகை ஆற விடவும்.

3. பாகு நல்லா திக்காக இருக்க வேண்டும். அதனால், காய்ச்சிய பாகை மீண்டும் காய்ச்ச வேண்டும்.

4. பின்னர் இதனுடன் வறுத்த கடலையை சேர்த்து கிளறவும்.

5. தேவைப்பட்டால், இதில் ஏலக்காய் தூள், துறுவிய தேங்காயாயை சேர்த்துக்கொள்ளலாம்.

6. மிதமான சூட்டில் வந்தவுடன், இந்த கலவையை உருண்டையாக அல்லது சதுரமாக பிடித்துக்கொள்ளவும்.

7. இப்போது அசத்தலான கடலை மிட்டாயை சுவைக்கத் தயாராகுங்கள். இந்த மிட்டாய் நீண்டநாள்கள் கெடாமல் அப்படியே இருக்கும்.

top videos

    8. கடைசியாக காற்று போகாத ‘ஏர் டைட்’ டப்பாக்களில் எடுத்து வைத்தால், பல நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

    First published:

    Tags: Evening Snacks, Sweet recipes