முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கசக்காமல்… மொறு மொறுன்னு பாகற்காய் வறுவல் செய்யலாமா..? இதோ ரெசிபி!

கசக்காமல்… மொறு மொறுன்னு பாகற்காய் வறுவல் செய்யலாமா..? இதோ ரெசிபி!

கேரளா ஸ்டைல் பாகற்காய் வறுவல் செய்வது எப்படி?

கேரளா ஸ்டைல் பாகற்காய் வறுவல் செய்வது எப்படி?

How to make Bitter gourd stir fry | ஒரு முறை பாகற்காயை இப்படி சமைத்து கொடுங்க. வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாகற்காய் நம்மில் பலருக்கும் பிடிக்காது. ஆனால், அதில் அதிக அளவிலான ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை பெரும்பாலானோர் வெறுப்பதற்கு காரணம் இதன் கசப்பு சுவை. சிலருக்கு கசப்பு பிடிக்கும், இன்னும் சிலருக்கு பிடிக்காது. அப்படி உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பாகற்காயை வெறுத்தால், ஒரு முறை நாங்கள் கூறுவது போல செய்து கொடுங்கள். விரும்பி சாப்பிடுவார்கள்.

சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் என அனைத்து வகையான உணவுகளுக்கும் ஏற்ற பாகற்காய் வறுவல் செய்வது எப்படி என இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

பாகற்காய் - 1 கிலோ.

மைதா மாவு - 2 அல்லது 3 டீஸ்பூன்

பூண்டு - 9 முதல் 10 பல்.

இஞ்சி - 1 துண்டு.

வினிகர் - 1 அல்லது 2 டீஸ்பூன்.

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்.

மோர் - 1/4 கப்.

உப்பு - 1 அல்லது 2 தேக்கரண்டி.

எண்ணெய் - 4 அல்லது 5 டீஸ்பூன்.

செய்முறை :

முதலில் பாகற்காயை தண்ணீரில் கழுவ வேண்டும்.

பின்னர், கழுவிய பாகற்காயை மெல்லிய வட்ட துண்டுகளாக வெட்ட வேண்டும். வெட்டியா பாகற்காய் துண்டுகளை புளித்த மோரில் 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.

10 நிமிடம் கழித்து பாகற்காய் துண்டுகளை மட்டும் பிழிந்து தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.

இப்போது, இஞ்சி மற்றும் பூண்டை சுத்தம் செய்து உரலில் நசுக்கி, தனியாக எடுத்து வைக்கவும்.

இதையடுத்து, ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

Also Read | லேட் நைட்டில் திடீரென பசிக்குதா..? கிடைப்பதை சாப்பிடாமல் ஆரோக்கியமாக சாப்பிட ஸ்நாக்ஸ்..!

பிறகு, இதில் சிறிது வினிகர் ஊற்றி, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு அல்லாமல், கொஞ்சம் கெட்டியாக கரைத்துக்கொள்ளவும்.

அதில், நறுக்கிய பாகற்காய் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவும். இதை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.

top videos

    இப்போது, ஒரு காடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடேற்றவும். எண்ணெய் சூடானதும், பாகற்காயை அதில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்தால், கேரளா ஸ்டைல் பாகற்காய் வறுவல் தயார்.

    First published:

    Tags: Bitter gourd, Food recipes