நூடில்ஸ் மற்றும் பாஸ்தா பிடிக்காத மனிதர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், நம்மில் பலரின் காலை அல்லது இரவு உணவு இவற்றில் ஒன்றாகத்தான் இருக்கும். என்னடா... எப்போமே பாஸ்தாவை ஒரே மாதிரியாக சமைத்து சாப்பிட்டு சலிப்பா இருக்கு என நீங்கள் நினைத்தால், நாங்கள் உங்களுக்கு ஒரு புது ரெசிபி பற்றி கூறுகிறோம்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஸ்பெகட்டி பாஸ்தா செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஸ்பெகட்டி - 250 கிராம்.
உப்பு - 3 ஸ்பூன்.
எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் ஆயில் - 3 ஸ்பூன்.
பூண்டு - 2 ஸ்பூன் (நறுக்கியது).
வெங்காயம் - 1 நறுக்கியது.
தக்காளி - 4 நறுக்கியது.
மிளகு தூள் - 1 ஸ்பூன்.
சர்க்கரை - 1 ஸ்பூன்.
சில்லி பிளேக்ஸ் - 1 ஸ்பூன்.
இட்டாலியன் சீசனிங் - 2 ஸ்பூன்.
அரைத்த தக்காளி விழுது - கால் கப்.
பேசில் இலை - 1.
பார்மஷான் சீஸ் - தேவையான அளவு.
செய்முறை :
முதலில் தக்காளியை அடிப்பக்கம் கீறி தண்ணீரில் போட்டு 5 நிமிடம் வேகவைக்கவும்.
பிறகு நன்கு ஆறவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.
இதை அடுத்து ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு மற்றும் ஸ்பெகட்டியை சேர்த்து 20 நிமிடம் வேகவைக்கவும்.
பின்பு தண்ணீரை வடிகட்டி அதில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் சேர்த்து கலந்து விடவும்.
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய், நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.
Also Read | "பீச் ஸ்டைல் மாங்காய்" செய்வது எப்படி..? சீரியல் நடிகையின் சூப்பர் டிப்ஸ்!
இதை தொடர்ந்து, நறுக்கிய வெங்காயம், தக்காளியை அடுத்தடுத்து சேர்த்து வதக்கவும்.
இப்போது உப்பு, மிளகு தூள், சர்க்கரை, சில்லி பிளேக்ஸ், இட்டாலியன் சீசனிங் சேர்த்து 10 நிமிடம் வதக்கவும்.
பின்னர், அரைத்த தக்காளி விழுதுதை சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் வேகவைக்கவும்.
பச்சை வாசனை மாறியதும், வேகவைத்த ஸ்பெகட்டியை சேர்த்து கலந்து விடவும்.
எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெய் மற்றும் பேசில் இலை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இறுதியாக பார்மஷான் சீஸை சேர்த்து கலந்து இறக்க சுவையான ஸ்பெகட்டி தயார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food recipes, Pasta