இன்றைய காலத்தில் நம்மில் பலருக்கு சமைக்க நேரம் இல்லை. அதனால் தான் பெருபாலான வீடுகளில் பிரட் ஆம்லேட், பிரெட் சான்வெஜ், பிரட் டோஸ்ட் என ஒரே ரெசிபியை தினமும் மாற்றி மாற்றி செய்து சாப்பிடுவோம். இதை செய்வதற்கு நமக்கு மட்டும் அல்ல, இதை சாப்பிடுபவர்களுக்கும் சலித்து போயிருக்கும்.
பிரெட் வைத்து ஏதாவது புது ரெசிப்பி செய்ய நீங்கள் முயற்சித்தால், நாங்கள் உங்களுக்கு ஒரு சூப்பர் ரெசிபி பற்றி கூறுகிறோம். பிரட் வைத்து ஒரு சுவையான சில்லி பிரட் ரெசிப்பி செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பாக்கலாம்.
தேவையான பொருட்கள் :
பிரட் துண்டுகள் - 5.
பூண்டு நறுக்கியது - 1 ஸ்பூன்.
இஞ்சி நறுக்கியது - 1 ஸ்பூன்.
பச்சை மிளகாய் நறுக்கியது - 2 ஸ்பூன்.
வெங்காயம் - 1 (நறுக்கியது).
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
உப்பு - 1/4 ஸ்பூன்.
மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.
வினிகர் - 1 ஸ்பூன்.
சோயா சாஸ் - 2 ஸ்பூன்.
எண்ணெய் - தேவையான அளவு.
மிளகாய் விழுது - 1 ஸ்பூன்.
தக்காளி கெட்சப் - 2 ஸ்பூன்.
சோளமாவு - 1 1/2 ஸ்பூன்.
தண்ணீர் - 1/4 கப்.
வெங்காயத்தாள் - 1 ஸ்பூன்.
கொத்தமல்லி இலை - ஒரு கொத்து.
செய்முறை :
முதலில் பிரட் டோஸ்ட் செய்ய, பிரட்டின் ஓரங்களை வெட்டி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
இப்போது ஒரு கடாயை எண்ணெய் ஊற்றி நறுக்கிய பிரட்டை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும்.
சில்லி பேஸ்ட் செய்ய மிளகாயை தண்ணீரில் வேகவைத்து, ஆறவிட்டு நன்கு விழுதாக அரைக்கவும்.
அடுத்து ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
Also Read | ஹைதராபாத் ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி..? இதோ ரெசிபி!!
இதையடுத்து நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.
அடுப்பை சிம்மில் வைத்து வினிகர், சோயா சாஸ், அரைத்த மிளகாய் விழுது, தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கலக்கவும்.
இதை தொடர்ந்து நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து கலந்து விடவும். பின்பு தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
இப்போது, சோளமாவு, தண்ணீர் இரண்டையும் சேர்த்து கட்டியின்றி கரைத்து கடாயில் சேர்க்கவும். பின்னர் டோஸ்ட் செய்த பிரட்டை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்கினால், காரமான சில்லி பிரட் ரெடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bread, Bread recipes, Food recipes, White bread