பொதுவாக வெங்காய பச்சடி, கேரட் பச்சடி, காராபூந்தி பச்சடி, வெள்ளரி பச்சடியை தான் அதிகமாக செய்து சாப்பிட்டு இருப்போம். புடலங்காய் வைத்து பச்சடி செய்துள்ளீர்களா? இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
புடலங்காய்- மீடியம் சைஸ் 1
தயிர்-1 கப்
பச்சை மிளகாய் -5
இஞ்சி-1 இன்ச்
தாளிப்பதற்கு:
எண்ணெய்- 1 ஸ்பூன்
கடுகு- 1/4 ஸ்பூன்
வெந்தயம்- 1/4 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு- 1/4 ஸ்பூன்
கடலைப்பருப்பு- 1/4 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை
மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் புடலங்காயை அலசி விட்டு, தோல் நீக்கி பின் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது ஒரு மிக்சி ஜாரில் இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து சிறிது நீர் தெளித்து அரைத்துக் கொண்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் கடுகு, கடலைப் பருப்பு,வெந்தயம், உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் கிள்ளி சேர்த்துக் கொண்டு, பின் கருவேப்பிலை,பெருங்காயத்தூள் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும்.
3. அத்துடன் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள புடலங்காயை சேர்த்து வதக்க வேண்டும். இது நீர்க் காய் என்பதால் இதில் இருந்து வரும் தண்ணீரே போதுமானது.
4. இப்போது புடலங்காயில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் உப்பு தூவி, பின் அரைத்து வைத்துள்ள மிளகாய் இஞ்சி விழுதினை சேர்த்து கிளறி விட்டு மூடி வைக்க வேண்டும்.
5. ஐந்து நிமிடங்கள் வரை வதக்கி விட்டு பின் அடுப்பினை ஆஃப் செய்து விட வேண்டும். ஆறிய பிறகு, இந்த புடலங்காய்களை வேறொரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
6. இப்போது அந்த பாத்திரத்தில் தயிர் சேர்த்து,கையளவு பொடியாக அரிந்த வெங்காயத்தையும் சேர்த்து ஒரு முறை உப்பை சரி பார்த்து விட்டு கிண்ணத்தில் நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இப்போது புடலங்காய் தயிர் பச்சடி ரெடி.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Pachadi recipes, Vegetable