வார இறுதி என்றாலே, அனைவரின் வீட்டிலும் அசைவ உணவுகளின் வாசனை மூக்கை துளைக்கும். ஆனால், நம்மில் பலர் எப்பவும் போல சிக்கன் குழம்பு, மட்டன் ப்ரை, மீன் வறுவல் மற்றும் பிரியாணி என ஒரே மாதரி சமைப்போம். இந்த முறை ஏதாவது புதிதாக ட்ரை செய்ய நீங்கள் விரும்பினால் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
மட்டனை வைத்து வெறும் 30 நிமிடத்தில் தயார் செய்யக்கூடிய சிந்தி ஸ்டைல் மட்டன் ப்ரை செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களே போதுமானது.
தேவையான பொருட்கள் :
மட்டன் - 500 கிலோ.
பப்பாளி காய் - 100 கிராம்.
வெங்காயம் - 2.
இஞ்சி & பூண்டு விழுது - 1 ஸ்பூன்.
தயிர் - 1 கப்.
தக்காளி - 2.
கொத்தமல்லி தழை - 1 கொத்து.
சீரகம் - 1 ஸ்பூன்.
கொத்தமல்லி விதைகள் - 1 ஸ்பூன்.
பச்சை மிளகாய் - 2.
சிவப்பு மிளகாய் - 1.
கரம் மசாலா - 2 ஸ்பூன்.
ஏலக்காய் - 2.
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
முதலில், ரெசிபி செய்ய எடுத்துக்கொண்ட மட்டனை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். இதை தொடர்ந்து பப்பாளி காயினை தோல் நீக்கி பொடியாக நறுக்கி ஒரு மிக்சி ஜாரில் போட்டு பேஸட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
இப்போது, அரைத்து வைத்துள்ள பப்பாளி பேஸ்டை சுத்தம் செய்து வைத்துள்ள மட்டன் துண்டுகளில் தடவி 1 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
இதற்கிடையில், எடுத்து வைத்துள்ள வெங்காயம், தக்காளி, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
தற்போது, சிந்தி மட்டன் செய்ய அகன்ற பாத்திரம் ஒன்றை எடுத்து அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் காய்ந்ததும் இதில் சீரகம், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
Also Read | இந்த முறை சிக்கனை இப்படி செஞ்சு பாருங்க… குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்!
வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் அதில் தக்காளி மற்றும் மட்டன் துண்டுகளை சேர்த்து 7 முதல் 8 நிமிடத்திற்கு நன்கு வதக்கவும். இதை தொடர்ந்து கரம் மசாலா, கொத்தமல்லி, ஏலக்காய் ஆகியவற்றையும் சேர்த்து வதக்கவும்.
மசாலா வாசம் மாறியதும் இதில் உப்பு, தயிர் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து மட்டனை நன்கு வேக வைக்கவும். ஒருவேளை நீங்கள் குக்கரில் சமைத்தால் குக்கராய் மூடி 5 விசில் வைக்கவும்.
மட்டன் நன்கு வெந்து, கிரேவியில் இருந்து என்னை தனியாக பிரிந்து வரும் நிலையில் அதில் கொத்தமல்லி தழைகளை பொடியாக நறுக்கி சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான சிந்தி மட்டன் ப்ரை தயார். இது வெள்ளை சாதம், பிரியாணி, இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food, Food recipes, Life18, Mutton recipes