முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பேரிட்சம் பழத்தை வைத்து ஒரு சூப்பரான பேரிட்சை கேக் செய்யலாமா?

பேரிட்சம் பழத்தை வைத்து ஒரு சூப்பரான பேரிட்சை கேக் செய்யலாமா?

சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பேரிட்சை கேக் ரெசிபி!

சுவையான மற்றும் ஆரோக்கியம் நிறைந்த பேரிட்சை கேக் ரெசிபி!

date cake recipe in Tamil : உங்கள் குழந்தைகளுக்கு பேரிட்சை பழத்தை வைத்து இப்படி கேக் செய்து கொடுங்க. விரும்பி சாப்பிடுவாங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆரோக்கியம் நிறைந்த பழங்கங்களில் ஒன்று பேரிச்சம் பழம். கொலஸ்ட்ரால் அளவை சீராக பராமரிக்க உதவுகிறது. அதுமட்டும் அல்ல, பக்கவாதம், இதயம் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றை தடுக்க பேரிச்சம் பழம் உதவுகிறது.

பேரிச்சம் பழத்தில் ஜிங்க், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இப்படி எக்கச்சக்கமான ஊட்டச்சத்துக்களை கொண்ட பேரிச்சம் பழத்தை பயன்படுத்தி சுவையான கேக் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

போரிட்சை பழம் - 30.

பால் - 2 கப்.

சர்கரை - 3/4 கப்.

கோதுமை மாவு - 2 கப்.

பேக்கிங் சோடா - 1 ஸ்பூன்.

எண்ணெய் - 3/4 கப்.

முந்திரி பருப்பு, பாதாம் - தலா ஒரு ஸ்பூன்.

செய்முறை :

முதலில், எடுத்துக்கொண்ட பேரிச்சம் பழத்தினை விதை நீக்கி பின் பொடியாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். பின்னர், இதனை ஒரு பாத்திரத்தில் பாலுடன் சேர்த்து 8 மணி நேரத்திற்கு நன்கு ஊற வைக்கவும்.

இதற்கிடையில், எடுத்துக்கொண்ட கோதுமை மாவினை ஒரு சல்லடை கொண்டு சலித்து சுத்தம் செய்து தனியே எடுத்து வைக்கவும்.

தற்போது, மிக்ஸி ஜார் ஒன்று எடுத்து அதில், பாலில் ஊறவைத்த பேரிச்சம் பழம் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்து ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்துக்கொள்ளவும்.

Also Read | ரவையில் செய்யப்படும் சுஜி மஞ்சூரியன்... இப்போ இதுதான் பலரது விருப்பமான டிஷ்..!

இப்போது, இதில் பேக்கிங் சோடா, எண்ணெய் மற்றும் கோதுமை மாவு சேர்த்து கேக் மாவு பதத்திற்கு நன்கு கரைத்துக் கொள்ளவும்.

தற்போது, பேக்கிங் ட்ரேவில் இந்த சேர்மத்தை மாற்றிக் கொள்ளவும். பின்னர், இதன் மீது பொடியாக இடித்த பாதாம் மற்றும் முந்திரி பருப்புகளை தூவவும்.

பின்னர், இந்த சேர்மத்தை மைக்ரோ ஓவனில் 180°C-ல் சுமார் 40 நிமிடங்களுக்கு வைத்து பேக் செய்து எடுத்தால் சுவையான கோதுமை பேரிட்சை கேக் ரெடி.

இனிப்பு சுவை கொண்ட இந்த கேக்கினை ஒரு தட்டில் சிறிதளவு சாக்லேட் சாஸுடன் சேர்த்து சுவையாக பரிமாறலாம். இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.

First published:

Tags: Cake Recipe in Tamil, Dates, Dates fruit, Food recipes