முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஜவ்வரிசி வைத்து ஒரு சூப்பர் லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்யலாமா..?

ஜவ்வரிசி வைத்து ஒரு சூப்பர் லன்ச் பாக்ஸ் ரெசிபி செய்யலாமா..?

மதிய உணவிற்கு ஏற்ற ஜவ்வரிசி புலாவ் - இதோ செய்முறை!

மதிய உணவிற்கு ஏற்ற ஜவ்வரிசி புலாவ் - இதோ செய்முறை!

உங்கள் குழந்தைக்கு மதிய உணவிற்கு ஏதாவது வித்தியாசமாக செய்து கொடுக்க விரும்பினால், ஜவ்வரிசி புலாவ் செய்து கொடுங்க. உங்க குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் இருக்கும் இயல்பான குழப்பத்தில் ஒன்று, நாளைக்கு என்ன குழம்பு வைப்பது என்பது தான். ஏனென்றால், ஒவ்வொரு நாளும் தங்களின் குடும்பத்தினருக்கு ஆரோக்கியமான, சுவையான மற்றும் வித விதமான உணவுகளை கொடுக்க வேண்டும் என்ற ஆர்வமாக உள்ளவர்கள் பெண்கள். அப்படி யோசிப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், வெறும் 20 நிமிடத்தில் ஜவ்வரிசி பயன்படுத்தி செய்யப்படும் ஒரு சுவையான ரெசிபி பற்றி கூறுகிறோம்.

அனைவரின் வீட்டிலும் எப்பவும் இருக்கக்கூடிய மற்றும் அதிகம் பயன்படுத்தாத பொருட்களில் ஒன்று ஜவ்வரிசி. அதை நாம் பெரும்பாலும் பாயாசம் செய்வதற்காக மட்டுமே பயன்படுத்துவோம். ஆனால், ஜவ்வரிசியை பயன்படுத்தி மிகவும் எளிமையான முறையில் புலாவ் ஒன்றை செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி - 150 கிராம்.

முந்திரி - 40 கிராம்.

உருளைக்கிழங்கு - 2.

வேர்க்கடலை - 20 கிராம்.

மிளகு - 1/2 ஸ்பூன்.

கொத்தமல்லி - 1 கொத்து.

பச்சை மிளகாய் - 7. எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்.

கடுகு - 1 ஸ்பூன்.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட ஜவ்வரிசியை ஒரு கோப்பை தண்ணீருடன் சேர்த்து 4 முதல் 5 மணி நேரத்திற்கு நன்கு ஊற வைக்க வேண்டும்.

இதனிடையே எடுத்துக்கொண்ட உருளை கிழங்கினை ஒரு குக்கரில் தண்ணீருடன் சேர்த்து (2 விசில் வர) அவித்து தனியே எடுத்துக்கொள்ளவும். பின்னர் இதன் தோல்களை நீக்கி சுத்தம் செய்துவிடவும்.

தற்போது, தோல் நீக்கி உருளைக் கிழங்கு, பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கி தனித்தனியே சிறு கோப்பைகளில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

தொடர்ந்து கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் வேர்க்கடலை மற்றும் முந்திரி பருப்பு சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

Also Read | கொளுத்தும் வெயிலுக்கு இதமான அன்னாசி மில்க் ஷேக் செய்வது எப்படி..?

தற்போது புலாவ் செய்ய, குக்கர் ஒன்றை அடுப்பில் வைத்து போதுமான அளவு எண்ணெய், நெய் சேர்த்து சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் கடுகு, மிளகு, முந்திரி, வேர்க்கடலை ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

தொடர்ந்து உருளை, பச்சை மிளகாய், உப்பு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து 5 - 7 நிமிடம் வதக்கவும். பின்னர், 1 கப் ஜவ்வரிசிக்கு 1 கப் தண்ணீர் என்ற விதத்தில் குக்கரில் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் நன்கு கொதிக்கும் நிலையில் இதில் ஊற வைத்த ஜவ்வரிசியை தண்ணீரில் இல்லாமல் நன்கு வடிகட்டி, சேர்த்துக்கொள்ளவும். தொடர்ந்து கொத்தமல்லி தழைகளையும் சேர்த்து 2 விசில் வர வேக வைத்து இறக்க சுவையான ஜவ்வரிசி புலாவ் ரெடி.

First published:

Tags: Food, Food recipes