முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரோஸ் மில்க் வீட்டிலேயே செய்து கொடுக்க டிப்ஸ்..!

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ரோஸ் மில்க் வீட்டிலேயே செய்து கொடுக்க டிப்ஸ்..!

ரோஸ் மில்க்

ரோஸ் மில்க்

Rose Milkshake Recipe : பால், சர்க்கரை, ரோஸ் சிரப், ஆகியவற்றை கொண்டு உடனடியாக மற்றும் சுலபமான முறையில் வீட்டிலேயே ரோஸ்மில்க் தயாரிப்பது எப்படி என இந்த தொகுப்பில் காணலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வெயில் காலம் வந்துவிட்டாலே ரோஸ் மில்க் பிரியர்களுக்கு கொண்டாட்டம் தான். ஏனென்றால், கொளுத்தும் வெயிலுக்கு சில்லென ஏதாவது குடிக்க வேண்டும் என ரோஸ் மில்க் வாங்கி நம்மில் பலர் குடித்திருப்போம். சிலர் வீட்டிலேயே செய்து வைத்து தேவைப்படும் போதெல்லாம் குடிப்பார்கள். அப்படிப்பட்ட ரோஸ் மில்க் பிரியர்களுக்கு தான் இந்த தொகுப்பு. வாருங்கள் வீட்டிலேயே எளிமையான முறையில் ரோஸ் மில்க் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பால் - 1 லிட்டர்.

கடல் பாசி - 4 கிராம்.

ரோஸ் மில்க் எசன்ஸ் - ¼ கப்.

சர்க்கரை - தேவையான அளவு.

செய்முறை :

கடல் பாசியில் அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி அதை அப்படியே அடுப்பில் வைத்து கிளறிவிட்டால் கெட்டியான பதத்தில் கரைந்துவிடும்.

பின் அதில் அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கரைத்துவிடுங்கள். பின் அதை ஒரு தட்டில் வடிகட்டி ஊற்றி ஓரமாக வைத்துவிடுங்கள்.

பின் பாலை நன்கு காய்ச்சி குளிர வைத்துக்கொள்ளுங்கள்.

இதையடுத்து, பால் பவுடரை கட்டிகளின்றி பால் ஊற்றி கரைத்துக்கொள்ளுங்கள். அதை இப்போது காய்ச்சிய பாலில் சேர்த்து நன்கு கரைக்கவும்.

Also Read | உடல் சூடு, உடல் எடை குறைப்பு என பல்வேறு நன்மைகளை வழங்கும் கம்பங்கூழ் செய்வது எப்படி..?

தொடர்ந்து பாலில் ரோஸ் மில்க் எசன்ஸ் சேர்த்து கலக்கவும். பின்னர், அதில் தேவையான அளவு சர்க்கரை சேர்க்கவும். இப்போது சுவையான ரோஸ் மில்க் ரெடி.

இதை பரிமாறும் போது கிளாசில் தயார் செய்த கடல் பாசியை எடுத்துக்கொள்ளுங்கள். அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி கிளாசில் 2 ஸ்பூன் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பின் தயாரித்து வைத்துள்ள ரோஸ் மில்க்கை அதில் ஊற்றுங்கள். அவ்வளவு தான் அசத்தலான ரோஸ் மில்க் தயார்.

கூடுதல் குறிப்பு : தேவைப்பட்டால் இதில் சியா விதை, பாதாம் பிசின் கூட சேர்த்துக்கொள்ளலாம்.

First published:

Tags: Food, Food recipes, Lifestyle, Rose Milk