முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / காரசாரமான பனீர் மஞ்சூரியன் செய்யலாமா..? இதோ ரெசிபி..!

காரசாரமான பனீர் மஞ்சூரியன் செய்யலாமா..? இதோ ரெசிபி..!

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் மஞ்சூரியன் செய்வது எப்படி?

ரெஸ்டாரண்ட் ஸ்டைல் பன்னீர் மஞ்சூரியன் செய்வது எப்படி?

Paneer Manchurian Recipe In Tamil | பனீர் நம்மில் பலருக்கும் பிடித்த உணவுகளில் ஒன்று. உங்களுக்கு பனீர் பிடிக்கும் என்றால், ஒரு முறை இந்த ரெசிபியை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பனீர் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால், இதை சிக்கனுக்கு மாறாக சிலர் சாப்பிடுகின்றனர். சிக்கனை வைத்து என்னவெல்லாம் செய்வார்களோ, அந்த ரெசிபிக்களை எல்லாம் பன்னீரை வைத்தும் செய்யலாம். அந்தவகையில், பன்னீர் வைத்து ‘பனீர் மஞ்சூரியன்” செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பனீரை பொரிப்பதற்கு…

பனீர் - 400 கிராம்.

மைதா - 2 ஸ்பூன்.

சோள மாவு - 4 ஸ்பூன்.

உப்பு - 1/2 ஸ்பூன்.

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.

எண்ணெய் - தேவையான அளவு.

பன்னீர் மஞ்சூரியன் செய்ய…

எண்ணெய் - 3 ஸ்பூன்.

பூண்டு - 1 ஸ்பூன் (நறுக்கியது).

இஞ்சி - 1 ஸ்பூன் (நறுக்கியது).

வெங்காயம் - 1 நறுக்கியது.

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.

தக்காளி கெட்சப் - 1/2 கப்.

சோயா சாஸ் - 2 ஸ்பூன்.

சோளமாவு கலவை - 1/2 கப்.

வெங்காயத்தாள் வெங்காயம் - 2.

வெங்காயத்தாள் கீரை - கால் கப்.

செய்முறை :

முதலில் பனீரை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். பின்னர், ஒரு பாத்திரத்தில் மைதா, சோள மாவு, உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் ஆகியவற்றுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கலந்து நறுக்கிய பன்னீரை சேர்த்து கலக்கவும்.

இப்போது, கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் மசாலாவில் கலந்த பன்னீரை சேர்த்து பொரிக்கவும்.

இதையடுத்து, ஒரு பானில் எண்ணெய் ஊற்றி, நறுக்கிய பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கவும். அடுத்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து 3 நிமிடம் வதக்கவும்.

Also Read | சில்லி சிக்கன்.. சில்லி பரோட்டா தெரியும்… சில்லி பிரெட் சாப்பிட்டிருக்கீங்களா..?

வெங்காயம் வதங்கியது, மிளகாய் தூள், மிளகு தூள் சேர்த்து மீண்டும் வதக்கவும்.

இதை தொடர்ந்து, தக்காளி கெட்சப், சோயா சாஸ் சேர்த்து மிதமான தீயில் கலக்கவும். பின்பு, சிறிது தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் வேகவிடவும்.

சோளமாவை தண்ணீரில் கட்டி இல்லாமல் கரைத்து, சேர்மத்தில் சேர்க்கவும். இதையடுத்து, பொரித்த பனீரை சேர்த்து கலந்து விட்டு, வெங்காயத்தாள் வெங்காயம், வெங்காயத்தாள் கீரை சேர்த்து மீண்டும் கலந்து விட சுவையான பனீர் மஞ்சூரியன் தயார்.

First published:

Tags: Food recipes, Paneer Recipe in Tamil, Paneer recipes