முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடலுக்கு புத்துணர்ச்சி தரும் லெமன் ஐஸ் டீ செய்வது எப்படி..? ரெசிபி இதோ...

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் லெமன் ஐஸ் டீ செய்வது எப்படி..? ரெசிபி இதோ...

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் லெமன் ஐஸ் டீ செய்முறை!

உடலுக்கு புத்துணர்ச்சி தரும் லெமன் ஐஸ் டீ செய்முறை!

Lemon Iced Tea Recipe In Tamil | நம்மில் பலருக்கு கொளுத்தும் வெயிலில் கூட டீ குடிக்கும் பழக்கம் இருக்கும். அப்படி உங்களுக்கும் அந்த பழக்கம் இருந்தா உங்களுக்கான ஒரு சூப்பர் ரெசிபி பற்றி கூறுகிறோம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பலருக்கும் டீ, காபி பிடிக்கும். எந்த அளவுக்கு என்றால், கொளுத்தும் வெயிலுக்கு அனைவரும் ஜூஸ் கடையை நோக்கி படையெடுத்தான், நாம் டீ கடையை நோக்கி செல்வோம். அந்த அளவுக்கு டீ வெறியர்கள் இருக்கும் வரை இந்த மவுசு எப்போதும் குறையாது.

டீ பிடிக்கும் ஆனால் வெயில் காலத்தில் பிடிக்காது என்றால், உங்களுக்கு ஒரு சூப்பர் ரெசிபி பற்றி கூறுகிறோம். இது உடலில் உள்ள கேட்ட கொழுப்பை கரைத்து, உடலுக்கு புத்துணர்ச்சி தரும். வாருங்கள் லெமன் ஐஸ் டீ செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

தண்ணீர் - 2 லிட்டர்.

சர்க்கரை - 1 1/2 கப்.

எலுமிச்சைப்பழதோல் - 2

புதினா இலை - சிறிது.

டீ தூள் - 2 தேக்கரண்டி.

எலுமிச்சை பழச்சாறு - 4 பழம்.

ஐஸ் கட்டிகள் - தேவையான அளவு.

செய்முறை :

முதலில், எடுத்து வைத்துள்ள எலுமிச்சை பழத்தை நன்கு சுத்தம் செய்து, அதன் தோலை மட்டும் உரித்து தனியே எடுத்து வைக்கவும்.

மீதம் உள்ள எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து தனியே எடுத்து வைக்கவும்.

இப்போது சர்க்கரை சிரப் செய்ய ஒரு பாத்திரத்தில் 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரை மற்றும் எலுமிச்சை பழ தோல் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு புதினா இலையை சேர்த்து இறக்கி வைக்கவும்.

Also Read | வயிற்று உப்புசத்தை நொடியில் மறைய வைக்கும் தேநீர்..!

இப்போது, லெமன் ஐஸ் டீ செய்ய மற்றொரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் அதில் டீ தூள் சேர்த்து அதிக தீயில் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

பின்பு டீ யை வடிகட்டி, இதனுடன் சர்க்கரை பாகையும் வடிகட்டி சேர்த்து நன்கு கலந்து விட்டு ஆறவிடவும்.

டீ நன்கு ஆறிய பிறகு எலுமிச்சைப்பழத்தின் சாறையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

top videos

    இப்போது, ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ் கட்டிகள், எலுமிச்சைப்பழதுண்டுகள், புதினா இலை ஆகியவற்றை சேர்த்து, தயார் செய்து வைத்துள்ள லெமன் டீ ஊற்றினால் லெமன் ஐஸ் டீ தயார்.

    First published:

    Tags: Food recipes, Tea