முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இனி பேக்கரி ஸ்டைல் ராகி பிஸ்கட் வீட்டிலேயே செய்யலாம்.. இதோ உங்களுக்கான ரெசிபி!

இனி பேக்கரி ஸ்டைல் ராகி பிஸ்கட் வீட்டிலேயே செய்யலாம்.. இதோ உங்களுக்கான ரெசிபி!

ராகி பிஸ்கட் செய்வது எப்படி

ராகி பிஸ்கட் செய்வது எப்படி

Eggless Jaggery Ragi Cookies | அதிக ஊட்டச்சத்து நிறைந்த ராகி பிஸ்கட் -யை வீட்டிலேயே செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிஸ்கட் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால், வேலைக்கு, பள்ளிக்கு, கல்லூரிக்கு, பார்க், மருத்துவமனை இப்படி எங்கு சென்றாலும் நமது பையில் பிஸ்கட் இருக்கும்.

இந்த கோடை விடுமுறையில் உங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஆரோக்கியமான கேழ்வரகு பிஸ்கட் செய்து கொடுங்கள். இதற்கான ரெசிபியை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 1 கப்.

நாட்டு சர்க்கரை - ½ கப்.

ஏலக்காய் - 4.

இஞ்சி - 2 இன்ச் அளவு.

ரைஸ் பிராண்ட் எண்ணெய் - ½ கப்.

பேக்கிங் பவுடர் - 1 ஸ்பூன்.

முட்டை - 1 | உப்பு - ½ ஸ்பூன்.

செய்முறை :

முதலில் பிஸ்கட் செய்ய எடுத்துக்கொண்ட ஏலக்காயினை ஒரு மிக்ஸி ஜாரில் சிறிதளவு சர்க்கரையுடன் சேர்த்து பவுடர் போல அரைத்து, பொடி தயார் செய்துக் கொள்ளவும்.

இதை தொடர்ந்து, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் இந்த ஏலக்காய் பொடி மற்றும் கேழ்வரகு மாவினை சேர்த்து 4 முதல் 5 நிமிடத்திற்கு மிதமான சூட்டில் வறுத்து தனியாக ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

பின்னர், இந்த மாவுடன் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு பிசைந்துக் கொள்ளவும். இப்போது, எடுத்துக்கொண்ட இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து பின் உரலில் உப்புடன் சேர்த்து இடித்துக்கொள்ளவும்.

ALSO READ | ப்ரெஞ்ச் ப்ரைஸ் தெரியும்.. அதென்ன பூசணிக்காய் ப்ரைஸ்… இதோ ரெசிபி.!

இப்போது இடித்த இஞ்சியை மாவு உள்ள பாத்திரத்தில் சேர்த்துக்கொள்ளவும். தொடர்ந்து எண்ணெய் மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கூழ்ம நிலைக்கு கரைத்துக்கொள்ள பிட்கட் மாவு தயார்.

top videos

    இதை பேக்கிங் ட்ரேயில் வேண்டிய அளவு மற்றும் வடிவத்தில் பிஸ்கட்டை தட்டி வைக்கவும். தற்போது ஓவனில் இந்த பேக்கிங் ட்ரேவினை 180° C வெப்பநிலையில் 8 நிமிடத்திற்கு வைத்து பேக் செய்து எடுக்க சுவையான ராகி பிஸ்கட் தயார்.

    First published:

    Tags: Food, Food recipes, Healthy Food