முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கீரை - உருளைகிழங்கு வைத்து சூப்பரான கட்லெட் செய்யலாமா..?

கீரை - உருளைகிழங்கு வைத்து சூப்பரான கட்லெட் செய்யலாமா..?

ஊட்டச்சத்து மிக்க கீரை - உருளைகிழங்கு கட்லெட் செய்வது எப்படி?

ஊட்டச்சத்து மிக்க கீரை - உருளைகிழங்கு கட்லெட் செய்வது எப்படி?

palak aloo cutlet recipe in Tamil | உங்க வீட்டில் இருப்பவர்களுக்கு ஒரு முறை இந்த ரெசிபியை மாலை நேர உணவாக செய்து கொடுங்க ரொம்ப பிடிக்கும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பலருக்கும் கட்லெட் மிகவும் பிடித்த ஸ்னாக்ஸ் ரெசிபிகளில் ஒன்று. அந்தவகையில், ஆரோக்கியமான மற்றும் சத்து நிறைந்த ஒரு ரெசிபி பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் கட்லெட் ஒன்றினை பசலை கீரை, உருளைக்கிழங்கு மற்றும் சில மசாலா பொருட்கள் பயன்படுத்தி எப்படி தயார் செய்வது என காணலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு - 2.

பசலை கீரை - 1 கப்.

வெங்காயம் - 1.

இஞ்சி பூண்டு விழுது - 1 ஸ்பூன்.

சீரகம் - 1/4 ஸ்பூன்.

கரம் மசாலா - 1 ஸ்பூன்.

மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை.

அரிசி மாவு - 1 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 1 ஸ்பூன்.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

முதலில் ரெசிபி செய்ய எடுத்துக்கொண்ட உருளைக்கிழங்கினை ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீருடன் சேர்த்து அவித்து, பின் தோல் நீக்கி தனியே எடுத்து வைக்கவும்.

இதனிடையே எடுத்துக்கொண்ட வெங்காயம் மற்றும் பசலை கீரையினை கழுவி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். அதேநேரம், கட்லெட் செய்ய தேவையான மற்ற பொருட்களையும் எடுத்து வைக்கவும்.

தற்போது அகன்ற பாத்திரம் ஒன்றை எடுத்து அதில், அவித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு மசித்துக் கொள்ளவும்.

தொடர்ந்து இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரை, இஞ்சி - பூண்டு விழுது, சீரகம், கரம் மசாலா, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, அரிசி மாவு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்துக்கொள்ள கட்லெட்டிற்கான சேர்மம் தயார்.

Also Read | குக் வித் கோமாளி விசித்ரா அம்மாவின் 'தாய் சிக்கன் ப்ரை' ரெசிபி..!

இதனிடையே கட்லெட் பொரித்து எடுக்க, பெரிய கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் போதுமான அளவு எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

எண்ணெய் நன்கு கொதிக்கும் நிலையில் இதில், தயார் செய்து வைத்துள்ள கட்லெட் சேர்மத்தை வேண்டிய வடிவத்தில் பிடித்து, எண்ணெயில் சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க சுவையான கீரை - உருளை கட்லெட் தயார்.

top videos

    சுவையான இந்த கீரை - உருளை கட்லெட்டினை உங்களுக்கு பிடித்தமான சட்னி மற்றும் சாஸுடன் சேர்த்து சுட சுட ஒரு தட்டில் வைத்து பரிமாறலாம்.

    First published:

    Tags: Food, Food recipes, Potato recipes