முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஆனியன் சப்ஜி.. சப்பாத்திக்கு பொருத்தமான சைட் டிஷ்..!

ஆனியன் சப்ஜி.. சப்பாத்திக்கு பொருத்தமான சைட் டிஷ்..!

ஆனியன் சப்ஜி

ஆனியன் சப்ஜி

எண்ணற்ற வகைகளில் கிடைக்கக் கூடிய இதை யாராக இருந்தாலும் மிஸ் செய்யக்கூடாத சுவை.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சப்பாத்திக்கு சைட் டிஷான சப்ஜி வட மாநில மக்களின் பிரதான உணவாக உள்ளது. அதுவும் எண்ணற்ற வகைகளில் கிடைக்கக் கூடிய இதை யாராக இருந்தாலும் மிஸ் செய்யக்கூடாத சுவை. அந்த வகையில் இந்த ஆனியன் சப்ஜி அவர்களுடைய ஃபேவரட் என்றே சொல்லலாம். அதை எப்படி செய்வது என இந்த பதிவில் காணலாம்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 5

சின்ன வெங்காயம் - 5

பச்சை மிளகாய் - 4

பூண்டு - 5 பற்கள்

இஞ்சி - 1/2 துண்டு

எண்ணெய் - 4

பட்டை - 2 துண்டு

கிராம்பு - 2

ஏலக்காய் - 1

சோம்பு - 1/2 tsp

கடுகு -1/2 tsp

சீரகம் - 1/2 tsp

கறிவேப்பிலை - 1 கொத்து

கொத்தமல்லி - சிறிதளவு

உப்பு - தே.அ

செய்முறை :

முதலில் சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு சேர்த்து கொரகொரப்பாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

பின் வெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள்.

அனைத்தும் தயார் நிலையில் வைத்ததும் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி காய வையுங்கள்.

காய்ந்ததும் கடுகு, சீரகம் , கறிவேப்பிலை , பச்சை மிளகாய் சேர்த்து தாளியுங்கள். பின் அரைத்த மசாலா விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.

நன்கு வதங்கியதும் வெங்காயத்தை சேர்த்து நன்கு பிரட்டி வதக்குங்கள். உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

இதில் தண்ணீர் ஊற்றக்கூடாது எண்ணெயிலேயே சுருங்க வதங்கி சுண்ட வேண்டும். 10 நிமிடங்களுக்கு சிறு தீயில் தட்டுப்போட்டு மூடிவிடுங்கள்.

நன்கு வதங்கியதும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.

top videos

    அவ்வளவுதான் ஆனியன் சப்ஜி ரெசிபி..!

    First published:

    Tags: Chapati, Onion