முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் தோசை… இதோ செய்முறை.!

உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் தோசை… இதோ செய்முறை.!

ஓட்ஸ் தோசை

ஓட்ஸ் தோசை

Oats Dosa Recipe In Tamil | எளிமையான உடல் எடை குறைப்புக்கு உதவும் ஓட்ஸ் தோசை செய்வதற்கான ரெசிபியை நாங்கள் கூறுகிறோம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

உடை எடையை குறைக்க நினைக்கும் அனைவரும் ஓட்ஸ் சாப்பிடுவார்கள். ஓட்ஸ் ஒரே மாதிரியாக சாப்பிட்டு சலிப்படைந்தால் இந்த ஓட்ஸ் தோசை செய்து சாப்பிடுங்கள். இதோ உங்களுக்கான ரெசிபி….

தேவையான பொருட்கள் :

ரோல்டு ஓட்ஸ் - 1 கப்.

வெங்காயம் - 1 நறுக்கியது.

பச்சை மிளகாய் - 3 நறுக்கியது.

இஞ்சி - 1 துண்டு நறுக்கியது.

கல் உப்பு - 1/2 தேக்கரண்டி.

சீரகம் - 1/2 ஸ்பூன்.

பெருங்காய தூள் - 1/2 ஸ்பூன்.

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை.

நெய் - தேவையான அளவு.

செய்முறை :

முதலில், ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ் மற்றும் தண்ணீர் சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்கவும்.

ஓட்ஸ் நன்கு ஊறியதும் மிக்ஸி ஜாருக்கு மாற்றி அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கல் உப்பு, சீரகம், பெருங்காய தூள், மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும்.

Also Read | ஒரு முறை மட்டன் கிரேவியை இப்படி செய்து பாருங்க… வாசனையும், சுவையும் தெருவையே தூக்கும்!

அரைத்த மாவை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கெட்டியாக இருந்தால் தண்ணீர் சேர்த்து கலக்கவும்.

தோசைக்கல்லை சூடாக்கி மாவை ஊற்றி, நெய் சேர்த்து இருபுறமும் வேகவைத்து எடுக்க சுவையான ஓட்ஸ் தோசை தயார்.

First published:

Tags: Food recipes, Oats Recipe in Tamil, Weight loss