முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் பணியாரம் - இதோ ரெசிபி!

உடல் எடையை குறைக்க உதவும் ஓட்ஸ் பணியாரம் - இதோ ரெசிபி!

உடல் பருமனை கட்டுப்படுத்தும் ஓட்ஸ் பணியாரம் செய்யலாமா?

உடல் பருமனை கட்டுப்படுத்தும் ஓட்ஸ் பணியாரம் செய்யலாமா?

நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவரா?... அப்போ இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க டயடுக்கு ஏற்ற ரெசிபி.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பலருக்கும் தலையாய பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை குறைப்பு. என்னதான் உடல் எடையை குறைக்க நாம் முயற்சித்தாலும் பலர் முழு ஈடுபாட்டுடன் இருப்பதில்லை. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் அனைவரின் டயட்டிலும் ஓட்ஸ் கட்டாயம் இருக்கும். ஆனால், நாம் அதை எப்பவும் போல செய்து சலிப்படைந்திருப்போம். ஆனால், நாங்கள் இன்று உங்களுக்கு புது ரெசிபி ஒன்றை கூறப்போகிறோம்.

அதிகரிக்கும் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவும் பணியாரம் ஒன்றினை ஓட்ஸ், உளுத்தம் பருப்பு மற்றும் சில மசாலா பொருட்கள் பயன்படுத்தி தயார் செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள் :

ஓட்ஸ் - 1/2 கப்.

உளுத்தம் பருப்பு - 1/2 கப்.

வெங்காயம் - 1.

குடை மிளகாய் - 1.

கேரட் - 1.

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்.

மிளகு பொடி - ஒரு சிட்டிகை.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட வெங்காயம், குடை மிளகாய், கேரட் ஆகியவற்றை சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைக்கவும்.

இதனிடையே எடுத்துக்கொண்ட உளுத்தம் பருப்பினை போதுமான அளவு தண்ணீருடன் சேர்த்து (30 நிமிடத்திற்கு) ஊற வைத்து பின், பேஸ்ட் போல் அரைத்து தனி ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

தொடர்ந்து எடுத்துக்கொண்ட ஓட்ஸினையும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து, உளுத்தம் மாவு உள்ள பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.

தொடர்ந்து பொடியாக நறுக்கிய கேரட், வெங்காயம், குடை மிளகாய், உப்பு, மிளகாய் தூள், மிளகு தூள் ஆகியவற்றையும் சேர்த்து அரை கூழ்ம நிலைக்கு கரைத்துக்கொள்ள பணியாரம் மாவு தயார்.

Also Read | வெயில் காலம் வந்தாச்சு.. இந்த வெள்ளரிக்காய் கோதுமை சப்பாத்தியை ட்ரை

இதனிடையே பணியார சட்டியினை அடுப்பில் வைத்து எண்ணெய் தேய்த்து சூடேற்றவும்.

பணியார சட்டி சூடேறியதும், கரைத்து வைத்துள்ள பணியார மாவினை இதில் ஊற்றி பதமாக சுட்டு எடுக்க சுவையான ஓட்ஸ் பணியாரம் ரெடி!.

top videos

    சுவையான இந்த ஓட்ஸ் பணியாரத்தை சாம்பார் மற்றும் உங்களுக்கு பிடித்தமான சட்னியுடன் சேர்த்து சுட சுட பரிமாறலாம்.

    First published:

    Tags: Food, Food recipes, Oats, Weight loss