முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற மாங்காய் பருப்பு செய்வது எப்படி..? இதோ ரெசிபி...

ரசம் மற்றும் தயிர் சாதத்திற்கு ஏற்ற மாங்காய் பருப்பு செய்வது எப்படி..? இதோ ரெசிபி...

மாங்காய் பருப்பு செய்வது எப்படி?

மாங்காய் பருப்பு செய்வது எப்படி?

Raw Mango Dal Recipe In Tamil | இந்த முறை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு மாங்காயை வைத்து இந்த புதிய ரெசிபியை செய்து கொடுங்கள். வீட்டில் உள்ளவர்கள் ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மாங்காய் சீசன் ஆரமித்ததில் இருந்து, நம்மில் பலரின் வீட்டில் மாங்காய் சாம்பார், மாஞ்சாய் பச்சடி, மாங்காய் சட்னி, மாங்காய் கேக் என மாங்காயை வைத்து வித விதமாக வீட்டில் உள்ளவர்களுக்கு சமைத்து கொடுப்போம்.

அந்தவகையில், மாங்காயை வைத்து செய்யக்கூடிய மற்றொரு புது ரெசிப்பி பற்றி நாங்கள் கூறுகிறோம். இது மிகவும் சுவையாக இருப்பதால், தயிர் சாதம், ரசம், வெள்ளை சாதம் என அனைத்துக்கும் அட்டகாசமாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு - 1/2 கப்.

மாங்காய் - 1.

பச்சை மிளகாய் - 3.

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்.

உப்பு - 1 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.

நெய் - 2 ஸ்பூன்.

கடலை பருப்பு - 1 ஸ்பூன்.

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்.

கடுகு - 1/2 ஸ்பூன்.

சீரகம் - 1/2 ஸ்பூன்.

சிவப்பு மிளகாய் - 4.

பெருங்காய தூள் - 1/2 ஸ்பூன்.

கறிவேப்பிலை - ஒரு கொத்து.

செய்முறை :

முதலில், மாங்காய் பருப்பு செய்வதற்கு எடுத்து வைத்துள்ள மாங்காயை சுத்தம் செய்து, தோலை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.

இதையடுத்து, ஒரு பாத்திரத்தில் துவரம் பருப்பை எடுத்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும்.

இப்போது ஊறவைத்த பருப்பு மற்றும் அதன் தண்ணீர் இரண்டையும் குக்கரில் போட்டு, நறுக்கிய மாங்காய் துண்டுகள், பச்சை மிளகாய் சேர்த்து 5 விசில் வரும் வரை வேகவிடவும்.

பருப்பு நன்றாக வெந்ததும் அதில், மஞ்சள் தூள், உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும். மசாலா வாசனை போகும் வரை 5 நிமிடம் கொதிக்க விடவும்.

Also Read | மாங்காய் துவையல் எப்போவாது செய்திருக்கிறீர்களா..? இன்னைக்கு டிரை பண்ணுங்க..!

இப்போது ஒரு கடாயை எடுத்து அடுப்பில் வைக்கவும். அதில், நெய் சேர்த்து சூடாக்கவும். பின்னர், அதில், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்க்கவும்.

கடுகு பொரிந்ததும் சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காய தூள் கறிவேப்பிலை சேர்த்து, அந்த தாளிப்பை பேருக்கு கலவையில் சேர்த்தல் சுவையான மாங்காய் பருப்பு தயார்.

top videos

    இந்த புளிப்பு மற்றும் காரமான மாங்காய் பருப்பை, சூடான சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

    First published:

    Tags: Food recipes, Mango