மதுரை என்றாலே மல்லி, ஜிகர்தண்டா, மீனாட்சி அம்மன் கோயில், தெப்பக்குளம் என அடுக்கி கொண்டே போகலாம். ஆனால், மதுரை என்றது அனைவரின் நினைவில் வருவது மல்லிகை பூவும், ஜிகர்தண்டாவும் தான். எப்போ மதுரைக்கு சென்றாலும், நாம் நாடும் முதல் விஷயங்களில் இவை இரண்டும் இருக்கும். அப்படி சுவையான ஜிகர்தண்டாவை எப்போதாவது சுவை மாறாமல் வீட்டிலேயே செய்ய முயற்சித்ததுண்டா?.
மதுரையின் மிக முக்கிய அடையாளமாக பார்க்கப்படும் பானங்களில் ஒன்று ஜிகர்தண்டா. சுவையான இந்த ஜிகர்தண்டாவினை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் – 1 லிட்டர்.
பாதாம் பிசின் – 5 ஸ்பூன்.
சர்க்கரை – 1 கப்.
நன்னாரி சர்பத் – 3 ஸ்பூன்.
பால்கோவா – 200 கிராம்.
சுவையூட்டப்பட்ட கிரீம் – 1/2 கப்.
செய்முறை :
ஜிகர்தண்டா செய்வதற்கு முந்தைய நாள் இரவு, ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் பாதாம் பிசின் சேர்த்து, ஒரு நாள் இரவு முழுவதும் நன்கு ஊற வைக்க வேண்டும். விடிந்ததும், இதில் உள்ள தண்ணீரை வடிக்கட்டி, பாதாம் பிசினை மட்டும் தனியே எடுத்து வைக்கவும்.
இதனிடையே கேரமல் செய்ய, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சர்க்கரையை பரவலாக தூவி பொன்னிறத்திற்கு வரும்வரை உருக வைக்கவும். பின்னர், இதில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து, அடுப்பில் இருந்து இறக்கி நன்றாக ஆறவிடவும்.
இது நன்கு ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாருக்கு மாற்றவும். இதனுடன், பால்கோவா, கிரீம் மற்றும் 1 கப் பால் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த இந்த சேர்மத்தை ஒரு டப்பாவிற்கு மாற்றி, பிரிட்ஜில் 2 மணி நேரத்திற்கு வைத்து குளிர்விக்கவும்.
2 மணி நேரத்திற்கு பின்னர், இந்த சேர்மத்தை வெளியே எடுத்து மீண்டும் மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும். நன்கு அரைத்த பின்னர், மீண்டும் அதே டப்பாவிற்கு மாற்றி, 8 மணி நேரத்திற்கு பிரிட்ஜில் வைத்து குளிர்விக்க கேரமல் ரெடி.
Also Read | தக்காளி, தேங்காய் சட்னிலாம் பழசு… இந்த முறை கொய்யா சட்னி செஞ்சு பாருங்க!
தற்போது பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் பால் ஊற்றி பாதி அளவு ஆகும் வரை பாலை சுண்ட காய்ச்சவும். பின்னர், இதனுடன் 2 ஸ்பூன் கேரமல், சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து, அடுப்பை அணைத்துவிடவும்.
இந்த சேர்மம் நன்கு ஆறியதும் ஒரு டப்பாவிற்கு மாற்றிக்கொள்ளவும். பின்னர், பிரிட்ஜில் இந்த சேர்மத்தை வைத்து குளிர்வித்தால், ஜிகர்தண்டா செய்வதற்கான சேர்மங்கள் தயார்.
தற்போது ஒரு கிளாஸில், 2 கிளாஸ் பாதாம் பிசின், அதன் மீது நன்னாரி சர்பத் மற்றும் பால் சேர்மங்கள் சேர்த்துக்கொள்ளவும். இறுதியாக கிரீம் மற்றும் கேரமல் சாஸ் ஊற்றிவிட மதுரையின் ஸ்பெஷ் ‘ஜிகர்தண்டா’ ரெடி!!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Food, Food recipes, Jigarthanda, Madurai