முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மண மணக்கும் மதுரை மட்டன் குழம்பு செய்வது எப்படி..?

மண மணக்கும் மதுரை மட்டன் குழம்பு செய்வது எப்படி..?

மதுரை மட்டன் குழம்பு

மதுரை மட்டன் குழம்பு

mutton recipe | காரசாரமான வாசனையுடன் சுண்டி இழுக்கும் மதுரை மட்டன் குழம்பு செய்வது எப்படி என்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். 

  • Last Updated :
  • Tamil Nadu, India

மட்டன் குழம்பு சாபிடுவதால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் இரத்த சோகையை கட்டுப்படுத்தலாம். எனவே கர்ப்பிணிகள் மட்டனை சாப்பிட்டால், அதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். குறிப்பாக கருப்பையில் இரத்த ஓட்டம் சீராக செல்ல வழிவகுக்கும். மட்டனை மதுரை ஸ்டைலில் குழம்பு வைப்பது எப்படி என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். 

தேவையான பொருட்கள்:

மட்டன் கறி எலும்புடன்  -1/2 kg

தக்காளி பெரியது -2

சின்ன வெங்காயம் - நறுக்கியது 1 கப்

கசகசா - 2 டேபிள்ஸ்பூன்

சீரகம் -2 டேபிள்ஸ்பூன்

குழம்பு மசாலா பொடி -2 டேபிள்ஸ்பூன்

கருவேப்பிலை -சிறிது

கொத்தமல்லி -சிறிது

தேங்காய் -1/2 மூடி

இஞ்சி பூண்டு பேஸ்ட் -1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

1. முதலில் கசகசா ,சீரகம் இரண்டையும் அம்மியில் அரைக்கவும். அம்மியில அரைத்தால் குழம்பு சுவையாக இருக்கும். பொதுவாகவே தென் மாவட்டங்களில் அசைவம் செய்யும் போது அம்மியில்தான் மசாலாவை அரைப்பார்கள்.

2. அதை நன்றாக அரைத்ததும் 5 சின்ன வெங்காயத்தை அதனுடன் தட்டி எடுக்கவும். கறியை நன்றாகக் கழுவி அரைத்த மசாலா , தக்காளி , இஞ்சி பூண்டு பேஸ்ட், குழம்பு மசாலாப்பொடி உப்பு போட்டு குக்கரில் 5 விசில் வரும் வரை வேக விடவும்.

3. கறி நன்றாக வெந்ததும் வாணலியில் நல்லெண்ணை ஊற்றி சோம்பு ,கறிவேப்பிலை ,வெங்காயம் போட்டு தாளிக்க வேண்டும் .

4. பின்னர் அடுப்பை சிம்மில் வைத்து தேங்காய்ப்பால் ஊற்ற வேண்டும் . அதிகம் கொதிக்க விடக்கூடாது .எண்ணெய் தெளிந்து மேலே மிதந்தது வந்ததும் கொத்தமல்லி தலையை தூவி இறக்கவும்.

top videos

    5. இப்போது சுவையான மதுரை மட்டன் குழம்பு ரெடி.

    First published:

    Tags: Mutton recipes