முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து.. ஈசியா செய்யலாம் மக்ரோனி சூப்!

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து.. ஈசியா செய்யலாம் மக்ரோனி சூப்!

மக்ரோனி சூப்

மக்ரோனி சூப்

மக்ரோனி சூப் ரெசிபி ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவு. குழந்தைகளுக்கு பிடித்த வகையில் மக்ரோனி வைத்து எப்படி சூப் செய்யலாம் என இங்கே பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பாஸ்தா பிடிக்காத மனிதர்கள் இருக்க முடியாது. ஏனென்றால், நம்மில் பலரின் காலை அல்லது இரவு உணவு பாஸ்தாவாகத்தான் இருக்கும். என்னடா... எப்போதுமே மக்ரோனி பாஸ்தாவை ஒரே மாதிரியாக சமைத்து சாப்பிட்டு சலிப்பாகி விட்டது என்றால் நாங்கள் உங்களுக்கு ஒரு புது ரெசிபி பற்றி கூறுகிறோம்.

மக்ரோனி பாஸ்தா சூப் சுவையான மற்றும் ஆரோக்கியமான ரெசிபிகளில் ஒன்று. இதில், சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் மாமிசங்கள் உள்ளது. இது பருவமழை காலம், குளிர்காலம் மற்றும் வெளியில் காலம் என அனைத்து பருவங்களிலும் மாலை நேரத்தில் சாப்பிட சிறந்தது. உங்க வீட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் மக்ரோனி சூப் எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

மக்ரோனி - 1 கப்.

பூண்டு பல் - 6.

பச்சை பட்டாணி - 1/2 கப்.

மிளகு - 1/2 ஸ்பூன் | வெண்ணெய் - 1 ஸ்பூன்.

கேரட் - 1.

வெங்காயம் - 1.

தக்காளி - 1.

உப்பு - தேவையான அளவு.

கொத்தமல்லி தழை - ஒரு கொத்து.

செய்முறை :

எடுத்துக்கொண்ட மக்ரோனியை ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீருடன் சேர்த்து அவித்து, பின் தண்ணீர் இன்றி வடிக்கட்டி தனியே எடுத்து வைக்கவும்.

இதனிடையே எடுத்துக்கொண்ட வெங்காயம், தக்காளி, கேரட் மற்றும் பூண்டினை சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி தனித்தனியே எடுத்து வைக்கவும்.

தற்போது சூப் செய்ய, கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து சூடேற்றவும். வெண்ணெய் நன்கு உருகியதும் இதில் வெங்காயம், பூண்டு சேர்த்து 2 - 3 நிமிடங்களுக்கு வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதில் நறுக்கி வைத்த கேரட், தக்காளி, பச்சை பட்டாணி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

ALSO READ | குழந்தைகளுக்கு பிடித்த எக் ரோல் செய்யலாமா? - இதோ ரெசிபி!

மசாலா வாசம் மாறும் நிலையில் இதில் அவித்து வைத்த மக்ரோனி, உப்பு மற்றும் மிளகு சேர்த்து 5 - 6 நிமிடங்களுக்கு (மிதமான சூட்டில்) வதக்கவும்.

இறுதியாக 6 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பில் இருந்து இறக்கிவிட சுவையான மக்ரோனி சூப் தயார்.

top videos

    சூடான இந்த சூப்பினை ஒரு கோப்பையில் ஊற்றி பின், இதன் மீது சிறிதளவு கொத்தமல்லி தழைகளை நறுக்கி தூவி சுவையாக பரிமாறலாம்.

    First published:

    Tags: Food, Food recipes, Healthy Food, Pasta