முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வீட்டிலேயே ஈஸியா சிக்கன் சவர்மா செய்யலாம்… இதோ ரெசிபி!

வீட்டிலேயே ஈஸியா சிக்கன் சவர்மா செய்யலாம்… இதோ ரெசிபி!

குழந்தைகளுக்கு பிடித்த சிக்கன் சவர்மா வீட்டிலேயே செய்யலாமா?

குழந்தைகளுக்கு பிடித்த சிக்கன் சவர்மா வீட்டிலேயே செய்யலாமா?

உடல் எடை குறைப்புக்கு உதவும் சிக்கன் சவர்மாவை வீட்டிலேயே ஆரோக்கியமான முறையில் எப்படி செய்யலாம் என பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சவர்மா பிடிக்காத ஜீவ ராசிகளை பார்ப்பது மிகவும் அரிதான செயல். ஏனென்றால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிக்கன் சவர்மா விருப்பமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. அதை, நாம் வீட்டிலேயே செய்யலாம் என எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?...

ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு உதவும் ( குறைந்த அளவு கொழுப்பு கொண்ட) சிக்கன் சவர்மா ஒன்றினை வீட்டிலேயே எளிமையாக செய்வது எப்படி என இந்த பதிவில் நாம் காணலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கன் - 500 கிராம்.

தயிர் - 2 கப்.

பூண்டு - 10 பற்கள்.

மிளகு பொடி - 1/2 ஸ்பூன்.

இலவங்கப் பொடி - 1/2 ஸ்பூன்.

கரி மசாலா - 1/2 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்.

எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்.

சவர்மா ரொட்டி - 1.

எள் பேஸ்ட் - 2 ஸ்பூன்.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

சவர்மா செய்வதற்கு முன்னதாக, ரெசிபி செய்ய எடுத்துக்கொண்ட சிக்கனை மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து சுத்தம் செய்யவும். பின்னர், கழுவிய சிக்கனை மெல்லிய பட்டையாக சிறு சிறு அளவுகளில் வெட்டி தயார் செய்துக்கொள்ளவும். இதனிடையே பூண்டை மசித்து பூண்டு விழுதினை தயார் செய்துக்கொள்ளவும்.

தற்போது ஒரு பெரிய கோப்பையில் சிக்கன் துண்டுகள் மற்றும் 1 கப் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். தொடர்ந்து இதில் பூண்டு விழுது, மிளகு பொடி, இலவங்கப் பொடி, கரி மசாலா, மிளகாய் தூள், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறி விடவும்.

பின்னர் இந்த பாத்திரத்தை (சேர்மத்தை) மூடி வைத்து குறைந்தது 4 மணி நேரத்திற்கு நன்கு ஊற வைக்க வேண்டும்.

Also Read | ரோட்டுக்கடை ஸ்டைல் பேல் பூரி வீட்டிலேயே செய்யலாம்..! - இதோ ரெசிபி!

இதனிடையே சவர்மாவிற்கான சாஸ் தயார் செய்ய, ஒரு கோப்பையில் 1/2 கப் தயிர், 1/2 ஸ்பூன் எலுமிச்சை சாறு, எள்ளு பேஸ்ட் மற்றும் பூண்டு விழுது சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

தற்போது சவர்மா தயார் செய்ய, கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் தயிரில் ஊற வைத்த சிக்கன் சேர்மத்தை சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

top videos

    தற்போது சவர்மா ரொட்டியை விரித்து, அதில் வதக்கிய சிக்கன் சேர்மம் மற்றும் சவர்மா சாஸ் சேர்த்துக்கொள்ளவும். பின்னர், ரொட்டியினை பதமாக உருட்டிக்கொள்ள சுவையான சிக்கன் சவர்மா தயார்.

    First published:

    Tags: Chicken Recipes, Food, Food recipes