முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இனி ரவை வைத்து உப்புமா செய்யாதீங்க… இந்த புது ரெசிபியை ட்ரை பண்ணுங்க!

இனி ரவை வைத்து உப்புமா செய்யாதீங்க… இந்த புது ரெசிபியை ட்ரை பண்ணுங்க!

சுவையான ரவா எலுமிச்சை சத்தம்

சுவையான ரவா எலுமிச்சை சத்தம்

Lemon Rava Rice Recipe In Tamil | நாம் எப்போதுமே ரவையை வைத்து கேசரி மற்றும் உப்புமா செய்திருப்போம். நமது வீட்டில் இருப்பவர்கள் உப்புமா என்ற பெயரை கேட்டாலே தலைதெறிக்க ஓடுவார்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பலர் காலையில், மதியம், இரவு என சமைக்க நேரம் இல்லாத சமயங்களில் உப்புமா என்ற 10 நிமிட ரெசிபியை செய்து சாப்பிடுவோம். நம்மில் பலருக்கு உப்புமா என்ற பெயரை கேட்டாலே “இது ரொம்ப தப்புமா” என்ற மைண்டு வாய்சுடன் கண்கள் கலங்கும். ஏனென்றால், உப்புமாவை வெறுக்காதவர்களை பார்ப்பது அவ்வளவு அரிதான விஷயம்.

ஆனால், ரவையை பயன்படுத்தி இனி உப்புமா செய்யவேண்டாம். உப்புமாவில் இருந்து உங்கள் குடும்பத்தை விடுவிக்கும் மற்றொரு புது ரெசிபி பற்றி கூறுகிறோம். இது, மிகவும் சுவையானது. இதை லன்சுக்கும் கொடுத்து விடலாம். உங்கள் குழந்தைகள் மற்றும் வீட்டில் இருப்பவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள் :

ரவையை வேகவைக்க

அரிசி ரவை - 1 கப்.

தண்ணீர் - 2 கப்.

உப்பு - 1 ஸ்பூன்.

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.

எண்ணெய் - 2 ஸ்பூன்.

எலுமிச்சைபழம் - 2.

தாளிப்பதற்கு :

எண்ணெய் - 2 ஸ்பூன்.

வேர்கடலை - 1 ஸ்பூன்.

கடலை பருப்பு - 1 ஸ்பூன்.

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்.

கடுகு - 1/2 ஸ்பூன்.

சீரகம் - 1/2 ஸ்பூன்.

பச்சை மிளகாய் - 3.

காய்ந்த மிளகாய் - 2.

கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி - தேவையான அளவு.

செய்முறை :

முதலில், எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு எடுத்து தனியே வைக்கவும். இதையடுத்து, பச்சை மிளகாயை இரண்டாக கீறி எடுத்து வைக்கவும்.

இப்போது, ஒரு அடுப்பில் கடாயை வைத்து அதில் அரிசி ரவையை 4 நிமிடம் வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.

இதையடுத்து, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் சேர்த்து, அதில் உப்பு, மஞ்சள், எண்ணெய் சேர்த்து நன்றாக சூடேற்றவும். தண்ணீர் கொதிக்கும் நிலையில், வறுத்து வைத்த ரவையை சேர்த்து கட்டி படாமல் நன்றாக கிண்டவும்.

Also Read | உங்க வயிற்றை க்ளீன் செய்ய வேண்டுமா..? இந்த 3 பானங்களை குடித்து பாருங்க..!

பின்னர், ரவையை மூடி வைத்து 5 நிமிடம் வேக விடவும். தண்ணீர் நன்றாக இஞ்சி, உதிரி உதிரியாக வந்ததும், அதில் எலும்பிச்சை சாற்றை ஊற்றி நன்றாக கிளறி அடுப்பை விட்டு இறக்கி தனியே வைக்கவும்.

இப்போது, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, வேர்கடலை, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

இந்த தாளிப்பை தயார் செய்து வைத்த ரவையில் சேர்த்து கிளறவும். பின்னர் கடைசியாக கொத்தமல்லி சேர்த்தால் சுவையான ரவா எலுமிச்சை சாதம் தயார்.

First published:

Tags: Food recipes, Lemon Rice, Rava recipes