முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பித்தத்தை நீக்கும் எலுமிச்சை ரசம்... இந்த சம்மருக்கு ட்ரை பண்ணுங்கள்...

பித்தத்தை நீக்கும் எலுமிச்சை ரசம்... இந்த சம்மருக்கு ட்ரை பண்ணுங்கள்...

எலுமிச்சை ரசம்

எலுமிச்சை ரசம்

lemon rasam | எலுமிச்சம்பழ ரசத்தை அடிக்கடி செய்து சாப்பிட்டால் பித்தம் தணியும். தலை சுற்றல் நீங்கும் |

  • Last Updated :
  • Tamil Nadu, India

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி  வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லி, கடுகு, இஞ்சி முதலியன சேர்க்க வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான். அத்தகைய ரசம் பலவகைப்படும். அதில் இந்த சம்மருக்கு எற்ற லெமன் ரசத்தை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.

தேவையான பொருள்கள்

பாசிப் பருப்பு

துவரம் பருப்பு

உப்பு

ரசப் பொடி

பெரிய தக்காளி

சிறிய எலுமிச்சம்பழம்

தனியா பொடி (மல்லிப் பொடி)

சீரகம்

மிளகு

மிளகாய்ப் பொடி

கடுகு

அச்சு வெல்லம்

செய்முறை:

1. இரண்டு பருப்புகளையும் நன்கு கழுவி, சுத்தம் செய்து அரை ஆழாக்குத் தண்ணீரில் வேக வைத்துக் கொள்ளவும்.

2. தக்காளிப் பழத்தை நன்கு துண்டுகளாக வெட்டி ஒரு ஆழாக்குத் தண்ணீரில் நன்கு பிசைந்து அதில் உப்பு, தயாரித்து வைத்து இருக்கும் ரசப் பொடி, மிளகாய்ப் பொடி, மல்லிப் பொடி, அரை அச்சு வெல்லக் கட்டி ஆகிய இவற்றை எல்லாம் போட்டு நன்றாக கொதிக்கவிடவும்.

3. பின் வேக வைத்த பருப்பை மத்தினால் நன்றாக் கடைந்து மேற்கண்ட பதார்த்தத்துடன் சேர்த்து ஒரு கொதி வந்த மாத்திரத்தில் இறக்கி வைத்து எலுமிச்சம் பழத்தை பிழிந்து உடன் கொத்துமல்லி, கருவேப்பில்லை சேர்க்கவும்.

4. பின்னர் கடுகையும், சீரகத்தையும் தாளித்துக் கொட்டலாம்.

5. இதோ இப்போது சுவையான எலுமிச்சை பழ ரசம் தயார்.

First published:

Tags: Rasam rice