முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பாய்வீட்டு ஸ்டைல் வெள்ளை குஸ்கா சாப்பிட்டிருக்கீங்களா..? இதோ ரெசிபி..

பாய்வீட்டு ஸ்டைல் வெள்ளை குஸ்கா சாப்பிட்டிருக்கீங்களா..? இதோ ரெசிபி..

மிகவும் சுவையான வெள்ளை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?

மிகவும் சுவையான வெள்ளை பிரியாணி செய்வது எப்படி தெரியுமா?

உங்க வீட்டுக்குழந்தைகளுக்கு ஒருமுறை பிரியாணி இப்படி செய்து கொடுங்க ருசித்து சாப்பிடுவாங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பிரியாணி என்ற பெயரை கேட்டாலே சிலருக்கு நாக்கில் எச்சில் ஊரும். ஏனென்றால் பிரியாணி பிரியர்கள் இல்லாத ஊரை பார்க்கவே முடியாது. அந்தவகையில், வெள்ளை குஸ்கா அல்லது வெள்ளை பிரியாணி என அழைக்கப்படும் சிக்கன் மட்டம் சேர்க்கப்படாமல் எளிமையாக செய்யப்படும் வெள்ளை குஸ்கா பிரியாணி செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இது சுவையில் பிரியாணியை போலவே இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு மதிய உணவாக செய்து கொடுக்க சிறந்த ரெசிபி. வாருங்கள் பாய்வீட்டு ஸ்டைல் வெள்ளை குஸ்கா செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

அரிசி – 300 கிராம்.

வெங்காயம் – 2.

தக்காளி -1.

பச்சை மிளகாய் – 4.

இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்.

முந்திரி -10.

பட்டை - 2.

லவங்கம் - 2.

பிரிஞ்சி இலை -1.

ஏலக்காய் -2 .

புதினா -1 கைப்பிடி.

கிராம்பு – 2.

சோம்பு – 1/2 டீஸ்பூன்.

தயிர் -2 டேபிள் ஸ்பூன்.

கொத்தமல்லி - ஒரு கொத்து.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

நெய் -1 டேபிள் ஸ்பூன்.

செய்முறை :

வெள்ளை குஸ்கா செய்வதற்கு முன், தக்காளி, பச்சை மிளகாய், வெங்காயத்தை சுத்தம் செய்து தனித்தனியாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும். இதற்கிடையில், புதினா இலைகளை மட்டும் தனியாக ஆய்ந்து எடுத்துக்கொள்ளவும்.

தொடர்ந்து எடுத்துக்கொண்ட அரிசியை தண்ணீரில் நன்கு கழுவி - அலசி பின், ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீருடன் சேர்த்து ஊற வைக்கவும். அதே சமயம் தேவையான பொருட்களை தயார் நிலையில் வைக்கவும்.

தற்போது வெள்ளை குஸ்கா செய்ய குக்கர் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நறுக்கிய வெங்காயம், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை, ஏலக்காய் ஆகியவற்றை சேர்த்து தாளிக்கவும்.

Also Read | சுவையான, காரசாரமான உருளைக்கிழங்கு பட்டாணி ரெசிபி..!

தொடர்ந்து நறுக்கிய தக்காளி, புதினா, இஞ்சி - பூண்டு விழுது, கிராம்பு, சோம்பு மற்றும் தயிர் சேர்த்து 3 - 4 நிமிடத்திற்கு வதக்கவும். பின்னர், போதுமான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் நன்கு கொதி வரும் நிலையில் ஊற வைத்த அரிசியை நன்கு வடிக்கட்டி இதோடு சேர்த்து கலந்துக்கொள்ளவும். பின்னர் உப்பு - காரம் சரி பார்த்து, குக்கரை மூடி 4 விசில் வர அரிசியை வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கவும்.

இதனிடையே ஒரு தாளிப்பு கரண்டியில் போதுமான அளவு நெய்யுடன் முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து பின், குக்கரில் உள்ள குஸ்காவுடன் சேர்த்து கிளறிக்கொள்ளவும். இறுதியாக கொத்தமல்லி தழைகளை இதன் மீது தூவி விட சுவையான வெள்ளை குஸ்கா ரெடி.

top videos

    இதை, முட்டை மசாலா அல்லது வெள்ளை குருமா வைத்து பரிமாறினால் அட்டகாசமாக இருக்கும்.

    First published:

    Tags: Briyani, Food, Food recipes