முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மாங்காய் துவையல் எப்போவாது செய்திருக்கிறீர்களா..? இன்னைக்கு டிரை பண்ணுங்க..!

மாங்காய் துவையல் எப்போவாது செய்திருக்கிறீர்களா..? இன்னைக்கு டிரை பண்ணுங்க..!

மாங்காயை வைத்து காரம் மற்றும் புளிப்பு சுவையுடைய துவையல் செய்யலாமா?

மாங்காயை வைத்து காரம் மற்றும் புளிப்பு சுவையுடைய துவையல் செய்யலாமா?

Coconut Mango Chutney recipe In Tamil | மாங்காயை வைத்து காரம் மற்றும் புளிப்பு சுவையுடைய ஒரு சூப்பரான மாங்காய் துவையல் செய்யலாமா?... இதோ உங்களுக்கான ரெசிபி கீழே.

  • Last Updated :
  • Tamil Nadu, India

மாங்காய் சீசன் வந்து விட்டது. மாங்காய் ஊறுகாய், மாங்காய் பச்சடி, மாங்காய் சாம்பார் என மாங்காயை வைத்து பல ரெசிபிக்களை செய்திருப்போம்.

இந்த முறை மாங்காயை வைத்து செய்யக்கூடிய ஒரு புது ரெசிப்பி பற்றி நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். மாங்காய் மற்றும் தேங்காயை பயன்படுத்தி ஒரு சூப்பரான சட்னி செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மாங்காய் - 1.

துருவிய தேங்காய் - 1/2 கப்.

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்.

உப்பு - 1 ஸ்பூன்.

சிவப்பு மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.

சீரகம் - 2 ஸ்பூன்.

எண்ணெய் - 2 ஸ்பூன்.

கடலை பருப்பு - 1 ஸ்பூன்.

உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்.

கடுகு - 1/2 ஸ்பூன்.

சிவப்பு மிளகாய் - 5

பெருங்காய தூள் - 1/2 ஸ்பூன்.

கறிவேப்பிலை - சிறிது.

செய்முறை :

முதலில், மாங்காயை நன்றாக கழுவி தோலை உரித்து துண்டுகளாக நறுக்கி தனியே வைக்கவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் மாங்காய் துண்டுகள், துருவிய தேங்காய், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரக தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

Also Read | உங்க குழந்தை ரொம்ப ஒல்லியா இருக்கா..? அப்போ இந்த ஊட்டச்சத்து நிறைந்த லட்டுவை கொடுங்க..!

இப்போது, தாளிக்க கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு சேர்த்து சேர்க்கவும்.

கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன், சிவப்பு மிளகாய், கறிவேப்பிலை மற்றும் பெருங்காய தூள் சேர்த்து கலந்து விடவும்.

top videos

    பின்பு தாளித்ததை துவையலுடன் சேர்த்தால், சுவையான தேங்காய் மாங்காய் துவையல் ரெடி.

    First published:

    Tags: Food recipes, Mango, Pickle