முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நாவில் எச்சில் ஊரும் சிக்கன் ஊறுகாய் செய்யலாமா?.... இதோ ரெசிபி!

நாவில் எச்சில் ஊரும் சிக்கன் ஊறுகாய் செய்யலாமா?.... இதோ ரெசிபி!

காரசாரமான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி?

காரசாரமான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி?

boneless chicken pickle recipe in tamil | நம்மில் பலருக்கு சிக்கன் பிடிக்கும். சிக்கனை வைத்து ஒரு சூப்பரான ஊறுகாய் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

சிக்கன் பிடிக்காதவர்களை பார்ப்பது அரிது. அது போலவே ஊறுகாயும். பிடிக்காத உணவாகவே இருந்தாலும் ஒரு ஸ்பூன் ஊறுகாய் இருந்தால் போதும் அந்த உணவை சாப்பிட சுவையாக இருக்கும். அந்த வகையில், சுவையான சிக்கன் ஊறுகாய் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மசாலா தூள் அரைக்க தேவையான பொருட்கள் :

பட்டை - 2 துண்டு.

ஏலக்காய் - 5.

கிராம்பு - சிறிதளவு.

தனியா - 4 மேசைக்கரண்டி.

சீரகம் - 2 தேக்கரண்டி.

கடுகு - 1 தேக்கரண்டி.

வெந்தயம் - 1 தேக்கரண்டி.

ஊறுகாய் செய்ய தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் - 1/2 கிலோ.

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்.

உப்பு - 1 ஸ்பூன்.

இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன்.

நல்லெண்ணெய் - 1 கப்.

மிளகாய் தூள் - 1/2 கப்.

உப்பு - 2 ஸ்பூன்.

எலுமிச்சைபழச்சாறு - 1 பழத்தின் சாறு.

அரைத்த மசாலா தூள்.

செய்முறை:

முதலில், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், பட்டை, ஏலக்காய், கிராம்பு, தனியா, சீரகம், கடுகு, வெந்தயம் சேர்த்து குறைந்த தீயில் பொன்னிறமாக வறுக்கவும்.

அவற்றை நன்கு ஆறவிட்டு பொடியாக அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஊறுகாய் செய்ய எடுத்து வைத்துள்ள சிக்கனில் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து தனியே வைக்கவும்.

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் என்னை சேர்க்காமல், சிக்கன் கலவையை அதில் போட்டு தண்ணீர் வற்றும் வரை நன்றாக கிளறவும்.

Also Read | குடை மிளகாயை ஒரு முறை இப்படி சமைத்து கொடுங்க… குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

சிக்கனில் இருந்த தண்ணீர் சுண்டியதும், அதில் நல்லெண்ணெய் சேர்த்து பொன்னிறமாக பொரிக்கவும்.

சிக்கன் பொன்னிறமாக மாறியதும், அதில் மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.

இதை தொடர்ந்து, அரைத்த மசாலா தூள் சேர்த்து கலந்துவிடவும். அடுப்பை குறைந்த தீயில் வைத்து 3 நிமிடம் வேகவிடவும்.

மசாலாவில் பச்சை வாசனை மாறியதும் அடுப்பை அணைத்து விட்டு எலுமிச்சை சாறு ஊற்றி கலந்துவிட சுமையான சிக்கன் ஊறுகாய் தயார்.

top videos

    குறிப்பு : தேவைப்பட்டால் எலுமிச்சை சாறுக்கு பதில் வினிகர் பயன்படுத்தலாம். ஊறுகாயை எடுக்கும் போது ஸ்பூனில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.

    First published:

    Tags: Chicken, Chicken Recipes, Food, Food recipes