முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஒரு கட்டு கீரை போதும்.. ஈசியா செய்யலாம் கீரை தயிர் பச்சடி.. இதோ ரெசிபி...!

ஒரு கட்டு கீரை போதும்.. ஈசியா செய்யலாம் கீரை தயிர் பச்சடி.. இதோ ரெசிபி...!

கீரை பச்சடி

கீரை பச்சடி

Keerai Pachadi | உடற்பருமன் கொண்டவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் சாப்பிட ஏற்ற ரெசிபி

  • Last Updated :

கோடை காலத்திற்கு ஏற்ற உணவாக கிராமத்து மக்கள் தினமும் தங்கள் உணவில் கீரையையும் தயிரையும் சேர்த்துக் கொள்வது வழக்கம். சில சமயங்களில் அதில் பச்சடி செய்து உண்பதும் அவர்களது வழக்கம். அந்த வகையில் கீரையில் தயிர் பச்சடி செய்வது எப்படி என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்திக் கொள்ளலாம்....

தேவையான பொருள்கள்:

சிறுகீரை - ஒரு கட்டு

தேங்காய் - அரை மூடி

முந்திரி - 5

பச்சை மிளகாய் - 4

தயிர் - ஒரு கப்,

பால் - ஒரு கப்,

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தாளிக்க:

கடுகு - கால் டீஸ்பூன்,

உளுத்தம்பருப்பு - கால் டீஸ்பூன்,

சீரகம் - கால் டீஸ்பூன்.

செய்முறை:

1. முதலில் கீரையைக் கழுவி மெல்லியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

2. அதன் பிறகு கீரையை வேகவைத்து அந்த நீரை வடிகட்டிக்கொள்ள வேண்டும்.

3. பிறகு எடுத்து வைத்த தேங்காய், முந்திரியை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் வாணலியில் எண்ணெய்விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருள்களைப் போட்டு சிவந்தபின் பச்சை மிளகாய், அரைத்த தேங்காய், முந்திரி விழுது சேர்த்துக் கிளற வேண்டும்.

Also see... திருமணம் என்றால் என்ன? அது அவசியமானதா? சத்குரு அளித்த விளக்கம்..!

top videos

    4. அதன் பின்னர் அடுப்பை நிறுத்திவிட்டு வேகவைத்த கீரையை அத்துடன் சேர்த்து நன்றாக மசித்துவிட வேண்டும். பின்னர் தயிர், பால், உப்பு சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.

    First published:

    Tags: Pachadi recipes, Spinach