முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / குழந்தைகளுக்கு விரும்பி உண்ணும் ஒரு சூப்பர் லஞ்ச் பாக்ஸ் ரெபிசி!

குழந்தைகளுக்கு விரும்பி உண்ணும் ஒரு சூப்பர் லஞ்ச் பாக்ஸ் ரெபிசி!

வெங்காயம் ரைஸ்

வெங்காயம் ரைஸ்

வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், குழந்தைகள் அவற்றை உணவில் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். வெங்காயத்தை ஒதுக்கி வைக்காத அளவுக்கு ஒரு சூப்பரான வெங்காய சாதம் எப்படி செய்வது என நாம் பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வெங்காயத்தில் எக்கசக்க ஆரோக்கிய நம்மைகள் உள்ளது. ஆனால், அவற்றை நாம் சரிவர உண்பதில்லை. வெங்காயத்தின் ஆரோக்கிய நன்மைகள் உங்கள் குழந்தைகளுக்கு முழுமையாக கிடைக்கும் வகையில், வெங்காயத்தை வைத்து ஒரு வெரைட்டி ரைஸ் செய்யலாமா?.

இதற்கு எந்த காய்கறிகளும் தேவை இல்லை. வெங்காயம் மட்டும் இருந்தால் போதும். மிகவும் குறைவான நேரத்தில் தயார் செய்யக்கூடிய சுவையான வெங்காய சாதத்தை, எளிய முறையில் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வெங்காயம் – 4.

பச்சை மிளகாய் – 2.

உப்பு – தேவையான அளவு.

கருவேப்பிலை – ஒரு கொத்து.

எண்ணெய் – 5 ஸ்பூன்.

கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்.

பெருங்காயத் தூள் – 1/4 ஸ்பூன்.

கடுகு – 1/2 ஸ்பூன்.

சீரகம் – 1/2 ஸ்பூன்.

உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்.

மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்.

மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்.

செய்முறை :

முதலில் தேவையான அளவு சாதத்தை தனியே வடித்து எடுத்து ஆற வைக்கவும். அதேநேரம் தேவையான அளவு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயினை எடுத்து நன்கு பொடியாக நறுக்கி தயாரா வைத்துக்கொள்ளவும்.

கடாய் ஒன்றை அடுப்பின் மீது வைத்து, அதில் 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு, சீரகம் சேர்த்து தாளித்து, பின்னர் கடலை, உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.

பின்னர் இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பகுதியளவு வறுபடும் நிலையில் எடுத்தால் போதுமானது.

Also Read | குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து.. ஈசியா செய்யலாம் மக்ரோனி சூப்!

பின்னர் இதனுடன் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும். கல் உப்பு சேர்த்தால், கரைவதற்கு நேரம் பிடிக்கும், எனவே தூள் உப்பு சேர்த்துக்கொள்ளுதல் நல்லது.

இந்த கலவையின் மணம் மாறும் நிலையில், இப்போது தனியாக எடுத்து வைத்துள்ள சாதத்தை கொட்டி மெதுவாக கிளறவும். இறுதியாக கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழை சேர்த்து ஒரு கிளறு கிளறி விட்டு, அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

top videos

    வடித்து வைத்துள்ள சாதத்தை கொஞ்சம் கொஞ்சமாக இந்த கலவையில் சேர்த்து கலந்து விட சுவையான வெங்காய சாதம் தயார். சுட சுட தட்டில் போட்டு பரிமார வேண்டியது தான். இதை உங்கள் குழந்தைகளுக்கு மத்திய உணவாகவும் கொடுக்கலாம். வெயில் காலத்தில் வெங்காயம் கட்டாயம் சேர்க்கவேண்டிய ஒன்று. இது மிகவும் சுவையானதும், ஆரோக்கியமானதும் கூட.

    First published:

    Tags: Food recipes, Onion, Onion health benefits