முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கொளுத்தும் வெயிலுக்கு இதமான பனை நுங்கு பாயாசம் செய்வது எப்படி?

கொளுத்தும் வெயிலுக்கு இதமான பனை நுங்கு பாயாசம் செய்வது எப்படி?

வெயிலுக்கு இதமான பனை நுங்கு பாயசம் செய்முறை!

வெயிலுக்கு இதமான பனை நுங்கு பாயசம் செய்முறை!

கோடைகாலம் வந்து விட்டது. நமது ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய நேரம். அதன் ஒரு படியாக பனை நுங்கு வைத்து பாயாசம் செய்வது எப்படி என பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

கோடை காலம் என்றாலே உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இளநீர், தர்பூசணி, தண்ணீர், பனை நுங்கு, எலுமிச்சை ஜூஸ் ஆகியவற்றை அதிகமாக உட்கொள்ள வேண்டிடும் என பரிந்துரைப்பார்கள். ஒரு நாள் இரண்டு நாள் சரி… கோடைக்காலம் முழுவதும் அவற்றை ஒரே மாதிரியாக சாப்பிட்டால் நமக்கு சலித்து போய்விடும்.

உங்கள் குழந்தைகளை கவரும் வகையில் ஒரு சூப்பரான பனை நுங்கு பாயாசம் ரெசிபியை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். பனை நுங்கு பாயாசம் செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை அசத்துங்க…

தேவையான பொருட்கள் :

பனை நுங்கு – 15.

பால் – 1 லிட்டர்.

சர்க்கரை – 300 கிராம்.

பாதாம் பிசின் – 3 துண்டு.

ஏலக்காய் – 5.

செய்முறை :

பாயாசம் செய்வதற்கு முந்தைய நாள் இரவே பாதாம் பிசினை ஒரு கிண்ணத்தில் எடுத்து, தண்ணீர் சேர்த்து நன்கு ஊற வைக்க வேண்டும். பாதாம் பிசின் நன்கு உப்பி, ஜெல் பதத்திற்கு வரும் வரை ஊற வைப்பது அவசியம்.

பாயாசம் செய்ய எடுத்துக்கொண்ட நுங்கினை தோல் நீக்கி சுத்தம் செய்யவும். பின்னர் இதில் 3 நுங்கினை மட்டும் சிறு துண்டுகளாக வெட்டி தனியே வைக்கவும். மீதமுள்ள நுங்கினை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக்கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். சேர்க்காமல் மைபோல அரைக்கவும்.

இப்போது பாயாசம் செய்ய, ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் பால் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சூடேற்றவும். பால் கொதிவரும் நிலையில் இதில் அரைத்து வைத்த நுங்கினை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்.

பின்னர் இதனுடன் 5 ஏலக்காயை தட்டி சேர்த்துக்கொள்ளவும். ஏலக்காயை சேர்த்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கொதிக்க விடவேண்டும். ஒரு லிட்டர் பால் முக்கால் லிட்டர் பதம் வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

Also Read | மட்டன் உப்புகண்டம் செய்வது எப்படி..?

இப்போது, இதனுடன் இனிப்புக்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும். 10 நிமிடங்கள் கழித்து, இதனுடன் நறுக்கி வைத்துள்ள நுங்கு துண்டுகளையும் சேர்த்து கலந்து விட வேண்டும்.

நுங்கு தண்ணீர் தனியே எடுத்து வைத்திருப்பின் அதை இதனுடன் சேர்த்து முதல் கொதி வரும் வரை காத்திருக்கவும். முதல் கொதி வந்தவுடன் பாத்திரத்தை இறக்கிவிட சுவையான நுங்கு பாயாசம் ரெடி. தேவைப்பட்டால், முந்திரி மற்றும் உலர் திராட்சையை நெய்யில் வறுத்து சேர்த்துக் கொள்ளலாம்.

top videos

    அடுப்பில் இருந்து இறக்கிய பாயாசத்தை ஆற விட்டு, ஒரு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடவும். 30 நிமிடம் கழித்து இந்த பாயாசத்தை ஒரு கோப்பையில் ஊற்றி குளிர்ச்சியாக பரிமாற வேண்டியது தான்!.

    First published:

    Tags: Food, Food recipes, Healthy Food, Summer Food, Sweet recipes