முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஹைதராபாத் ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி..? இதோ ரெசிபி!!

ஹைதராபாத் ஸ்டைல் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி..? இதோ ரெசிபி!!

பிரியாணிக்கு ஏற்ற கத்திரிக்காய் மசாலா செய்முறை!!

பிரியாணிக்கு ஏற்ற கத்திரிக்காய் மசாலா செய்முறை!!

Hyderabadi Bagara Baingan In Tamil | கத்தரிக்காயை எவ்வளவு வித விதமாக செய்தாலும் வீட்டில் இருப்பவர்கள் அதை தொட கூட மாட்டார்கள். இந்த முறை கத்தரிக்காயை இப்படி சமைத்து கொடுங்க. விரும்பி சாப்பிடுவார்கள்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பலருக்கும் கத்தரிக்காய் பிடிக்காது. ஆனால், அதில் எக்கச்சக்க சத்துக்கள் உள்ளது. வீட்டில் கைத்தரிக்காய் குழம்பு வைக்கும் போது குழம்பு காலியாகும் ஆனால், கத்தரிக்காய் அப்படியே பாத்திரத்தில் இருக்கும். ஒரு முறை கத்தரிக்காய் குழம்பை இப்படி வைத்துப்பாருங்கள். வீட்டில் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். எப்படி செய்வது என்பதற்கான செய்முறையை நாம் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வேர்க்கடலை - 2 ஸ்பூன்.

வெள்ளை எள்ளு - 1 ஸ்பூன்.

கசகசா - 1 ஸ்பூன்.

கொப்பரை தேங்காய் - 2 ஸ்பூன்.

கத்திரிக்காய் - 10.

நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்.

வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது).

கடுகு - 1 ஸ்பூன்.

சீரகம் - 1 ஸ்பூன்.

இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்.

மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.

தனியா தூள் - 1 ஸ்பூன்.

உப்பு - தேவையான அளவு.

புளி தண்ணீர் - 1/4 கப்.

கறிவேப்பிலை & கொத்தமல்லி - 1 கொத்து.

பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது).

செய்முறை :

முதலில் எடுத்துவைத்துள்ள கத்தரிக்காயை நன்றாக கழுவி எடுத்துவைக்கவும். வெங்காயம், மிளகாய் ஆகியவற்றையும் நறுக்கு தயார் செய்து வைக்கவும்.

இப்போது, ஒரு காடையை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலை, வெள்ளை எள்ளு, கசகசா, கொப்பரை தேங்காய் ஆகியவற்றை தனி தனியாக வறுத்து. அதை மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

பின்பு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கத்திரிக்காயை நான்காக வெட்டி சேர்த்து நன்கு வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

இப்போது, அதே கடாயில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்பு ஆறவிட்டு தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து கொள்ளவும்.

Also Read | சண்டே ஸ்பெஷல் : மும்பை ஸ்டைல் புதினா சிக்கன் கிரேவி செய்யலாமா?

அடுத்து கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம் சேர்த்து கலந்து பின்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்துவிடவும்.

பிறகு அரைத்த வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். இதை தொடர்ந்து, அரைத்த தேங்காய் வேர்க்கடலை விழுதை சேர்த்து வதக்கவும்.

பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கலந்துவிடவும்.பின்னர், எண்ணெய் பிரிந்து வந்ததும், புளி தண்ணீரை ஊற்றவும்.

இதை அடுத்து, கறிவேப்பிலை சேர்த்து கலந்து தேவையான அளவு தண்ணி ஊற்றி கலந்துவிடவும்.

பிறகு வதக்கிய கத்திரிக்காயை சேர்த்து கலந்து கடாயை மூடி 15 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.

பின்பு நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து இறக்க சுவையான ஹைதராபாத் கத்திரிக்காய் மசாலா தயார்.

First published:

Tags: Brinjal Recipe in Tamil, Food, Food recipes