முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / நாவில் எச்சில் ஊறவைக்கும் ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா செய்வது எப்படி..?

நாவில் எச்சில் ஊறவைக்கும் ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா செய்வது எப்படி..?

ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா செய்யலாமா?

ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா செய்யலாமா?

இட்டி, தோசை, பூரி, சப்பாத்தி என அனைத்துக்கும் ஏற்ற ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள் குருமா எப்படி செய்வது என இங்கே பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இட்டி, தோசை, பூரி, சப்பாத்தி என அனைத்துக்கும் சட்னி, சாம்பார் என ஒரே ரெசிபி செய்யாமல் ஹோட்டல் ஸ்டைலில் வெஜிடபிள் குருமா செய்து உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை அசத்துங்கள்.

நம் வீட்டில் எவ்வளவு ருசியாக சமைத்தாலும், ஹோட்டலில் கிடைக்கும் குருமாவின் சுவைக்கு ஈடாகாது. அப்படி என்னதான் இதுல சேர்ப்பங்களோ… இவங்க குருமா மட்டும் இவ்வளவு நல்ல இருக்கு என நம்மில் பலர் யோசித்திருப்போம். அதற்கான ரெசிபியை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் - 2.

கேப்சிகம் - 1.

பச்சை பட்டாணி - 1/4 கப்.

காலிஃபிளவர் - 1/2 கப்.

இஞ்சி விழுது - 1 ஸ்பூன்.

பெருஞ்சீரகம் விழுது - 1 ஸ்பூன்.

ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி.

தயிர் - 1/4 கப்.

தக்காளி - 2.

கேரட் - 2.

பூண்டு விழுது - 1 தேக்கரண்டி.

தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி.

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி.

கரம் மசாலா - 1/4 தேக்கரண்டி.

உருளை கிழங்கு - 1.

உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை :

முதலில், குருமா செய்ய எடுத்துக்கொண்ட காய்கறிகள் அனைத்தையும் நன்கு சுத்தம் செய்து நறுக்கி வைத்துக்கொள்ளவும். அதேவேளையில் சீரகம் மற்றும் தேங்காய் துருவலை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு அரைத்துக்கொள்ளவும்.

இப்போது, அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் நறுக்கி வைத்த வெங்காயம், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

வெங்கயாம் நன்கு வதங்கியதும், இதில் நறுக்கி வைத்த தக்காளி சேர்த்து மீண்டும் வதக்கவும். 5 நிமிடம் கழித்து அதில், நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், காலிஃபிளவர், கேப்சிகம் மற்றும் பட்டாணி சேர்த்து நன்கு கிளறி விடவும்.

Also Read | வெயிலுக்கு குளுகுளுனு தயிர் பூரி.. வீட்டிலேயே செய்ய ஈசி ரெசிபி இதோ.! 

காய்களின் பச்சை மணம் நீங்கியதும் இதில், உப்பு, மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா சேர்த்து கிளறி விடுங்கள். பின்னர் இதில் 1 கப் தண்ணீர் சேர்த்து பாத்திரத்தை 7 முதல் 8 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.

குருமா வாசம் வரும் நிலையில் பாத்திரத்தின் மூடியை திறந்து அதில் அரைத்து வைத்த தேங்காய் துருவலை சேர்த்து நன்கு கிளறி ஒரு 4 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.

top videos

    கொதி வரும் நிலையில் அடுப்பை அணைத்துவிடுங்கள். அவ்வளவு தான் சுவையான ஹோட்டல் ஸ்டைல் குருமா தாயர். இதை சுட சுட சப்பாத்தி, தோசை, இட்லி, பூரி என அனைத்துடனும் பரிமாறலாம்.

    First published:

    Tags: Food, Food recipes