முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ஒரு சூப்பரான லன்ச் பாக்ஸ் ரெசிபி… கொத்தமல்லி புதினா புலாவ் செய்முறை இதோ!

ஒரு சூப்பரான லன்ச் பாக்ஸ் ரெசிபி… கொத்தமல்லி புதினா புலாவ் செய்முறை இதோ!

கொத்தமல்லி புதினா புலாவ்

கொத்தமல்லி புதினா புலாவ்

Coriander Mint Pulao Recipe In Tamil | ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த கொத்தமல்லி புதினா புலாவ் செய்வது எப்படி என பார்க்கலாம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

கொத்தமல்லி மற்றும் புதினா ஆகிய இரண்டும் ஆரோக்கியம் நிறைந்தது என நாம் அனைவருக்கும் தெரியும். அந்தவகையில், கொத்தமல்லி மற்றும் புதினா வைத்து சூப்பரான புலாவ் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

பாஸ்மதி அரிசி - 1.1/2 கப்

இஞ்சி - 1 துண்டு நறுக்கியது.

பூண்டு - 5 பற்கள் நறுக்கியது.

சின்ன வெங்காயம் - 6 நறுக்கியது.

பச்சை மிளகாய் - 5 நறுக்கியது.

துருவிய தேங்காய் - 1 ஸ்பூன்.

கொத்தமல்லி இலை - ஒரு கொத்து.

புதினா இலை - ஒரு கொத்து.

நெய் - 2 ஸ்பூன்.

எண்ணெய் - 1 ஸ்பூன்.

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - சிறிது.

அன்னாசி பூ, கல்பாசி, ஜாவித்ரி - சிறிது.

பிரியாணி இலை - 2.

வெங்காயம் - 2 நீளவாக்கில் நறுக்கியது.

பச்சை மிளகாய் - 2 கீறியது.

தக்காளி - 2 நறுக்கியது.

உப்பு - 1 1/2 ஸ்பூன்.

தேங்காய் பால் - 2 கப்.

செய்முறை :

முதலில், பாஸ்மதி அரிசியை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் சேர்த்து தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊறவைக்கவும்.

இதையடுத்து, கொத்தமல்லி புதினா விழுது அரைக்க ஒரு மிக்ஸியில் நறுக்கிய இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், துருவிய தேங்காய், கொத்தமல்லி இலை, புதினா இலை, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைக்கவும்.

ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய், எண்ணெய், சேர்த்து நெய் உருகியதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி பூ, கல்பாசி, ஜாவித்ரி, பிரியாணி இலை சேர்க்கவும்.

Also Read | சப்பாத்திக்கு ஏற்ற முட்டை மிளகு மசாலா செய்வது?

அடுத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு கொத்தமல்லி புதினா விழுதை சேர்த்து கலந்து விடவும்.

அடுத்து உப்பு, ஊறவைத்த பாஸ்மதி அரிசி, நீர் சேர்த்த தேங்காய் பால் ஆகியவற்றை அடுத்தடுத்து சேர்த்து கலந்து விட்டு 1 விசில் வரும் வேகவிடவும்.

கொத்தமல்லி புதினா புலாவ் மீது வறுத்த முந்திரியை தூவி சூடாக பரிமாறவும்.

First published:

Tags: Food, Food recipes, Mint