முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெறும் 10 நிமிடத்தில் செய்து அசத்தலாம் அரிசி - மோர் சூப்... ரெசிபி இங்கே!

வெறும் 10 நிமிடத்தில் செய்து அசத்தலாம் அரிசி - மோர் சூப்... ரெசிபி இங்கே!

வெயிலுக்கு இதமான அரிசி - மோர் சூப் செய்வது எப்படி?

வெயிலுக்கு இதமான அரிசி - மோர் சூப் செய்வது எப்படி?

simple soup recipe with buttermilk | காய்கறி, சிக்கன், மீன் ஏன் மட்டன் வைத்து கூட சூப் செய்திருப்பீர்கள். ஆனால், அரிசி மற்றும் மோர் வைத்து ஒரு ஆரோக்கியமான சூப் செய்ய நாங்கள் உங்களுக்கு கற்றுத்தருகிறோம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பலருக்கு சூப் மிகவும் பிடித்த ஒன்று. பசியை போக்க சுலபமாகவும், துரிதமாகவும் சமைக்கக் கூடிய உணவுகளில் இதுவும் ஒன்று. இதற்கு வீட்டில் இருக்கும் பொருளே போதுமானது.

இதுவரை நீங்கள் காய்கறி, மக்ரோனி, மீன், மட்டன், சிக்கன் ஏன் முட்டை வைத்து கூட வீட்டில் உள்ளவர்களுக்கு சூப் செய்து கொடுத்திருப்பீர்கள். ஆனால், எப்போவாது மோர் மற்றும் அரிசி வைத்து சூப்பரான சூப் செய்யலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆம், நாங்கள் அதற்கான ரெசிபியை உங்களுக்கு கூறுகிறோம். விசித்திரமான முறையில் அரிசி - மோர் சூப் செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

தேவையான பொருட்கள் :

அரிசி - 1/4 கப்.

சீரகம் - 1 ஸ்பூன்.

புதினா தழை - 1 கொத்து.

மோர் - 2 கப்.

கறிவேப்பிலை, கொத்தமல்லி - 1 கொத்து.

சோள மாவு - 2 ஸ்பூன்.

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

முதலில் எடுத்துக்கொண்ட கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா இலைகளை மண் இல்லாமல் கழுவி சுத்தம் செய்து பின் பொடியாக நறுக்கி வைக்கவும். எடுத்து வைத்துள்ள அரிசியை தண்ணீர் ஊன்றி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

பின் கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து 2 - 3 நிமிடங்களுக்கு வறுத்து தனியே எடுத்து வைக்கவும். அதே போல புதினாவையும் வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.

இப்போது, ஒரு பாத்திரத்தில் ஊற வைத்த அரிசியை அடுப்பில் வைத்து நன்கு வேக வைக்கவும்.

Also Read | ப்ரெஞ்ச் ப்ரைஸ் தெரியும்.. அதென்ன பூசணிக்காய் ப்ரைஸ்… இதோ ரெசிபி.!

அரிசி பதமாக வெந்திருக்கும் நிலையில், போதுமான அளவு சோள மாவு, உப்பு மற்றும் மோர் சேர்த்து வேக மீண்டும் வேக வைக்கவும்.

தொடர்ந்து இதனுடன் நறுக்கி வதக்கிய புதினா, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து 2 முதல் 3 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.

இறுதியாக இதனுடன் பச்சை மிளகாய் ஒன்றினை நறுக்கி சேர்த்து கிளறி, அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான அரிசி மோர் சூப் ரெடி.

சுவையான இந்த சூப்பினை ஒரு கோப்பையில் ஊற்றி பின் இதன் மீது நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி சுட சுட பரிமாறலாம். மாலை நேரத்தில் அருந்த இது சிறப்பானது. மழைக்காலங்களிலும் இதை செய்து பருகலாம்.

First published:

Tags: Buttermilk, Food, Food recipes