முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / உலக இட்லி தினம் 2023 : குழந்தைகளுக்கு பிடித்த வெஜிடபிள் இட்லி எப்படி செய்வது..?

உலக இட்லி தினம் 2023 : குழந்தைகளுக்கு பிடித்த வெஜிடபிள் இட்லி எப்படி செய்வது..?

உடல் எடையை குறைக்க உதவும் சம்பா கோதுமை ரவை கிச்சடி!

உடல் எடையை குறைக்க உதவும் சம்பா கோதுமை ரவை கிச்சடி!

Vegetable Idli Recipe : உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியமான காலை உணவை கொடுக்க நினைத்தால் இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

தென்னிந்திய உணவுகளில் மிகவும் பிரபலமானது இட்லி மற்றும் தோசை. ஆனால், நம்மில் பலருக்கு இட்லி ஆரோக்கியம் நிறைந்ததாக இருந்தாலும் பலருக்கு பிடிக்காது. ஏனென்றால், அனைவரின் வீடுகளிலும் காலை அல்லது இரவு உணவு இட்லி அல்லது தோசையாக இருக்கும். இட்லி, தோசையின் அருமை வெளி மாநிலங்களில் தங்கி வேலை செய்பவர்களுக்குத்தான் தெரியும்.

ஆனால், சில வீடுகளில் பல்வேறு விதமாக இட்லி செய்வார்கள். அந்தவகையில் இன்று நாங்கள் உங்கள் குழந்தைகள் விரும்பி உண்ணும் வைகையில் இட்லியை எப்படி சமைக்கலாம் என கூறப்போகிறோம். வாருங்கள் ஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த 'வெஜிடபிள் இட்லி' எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

இட்லி மாவு - ½ கிலோ.

வேகவைத்த கலவை காய்கறிகள் (பச்சை பட்டாணி, கேரட், மஞ்சள் சோளம்) - ¾ கப்.

சமையல் எண்ணெய் - 1 தேக்கரண்டி.

உப்பு மற்றும் மிளகாய் தூள் - தேவையான அளவு.

இட்லி அச்சுகளுக்கு தடவ எண்ணெய்.

கிரீன் இட்லி சட்னி மற்றும் சாம்பார்.

செய்முறை :

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், வேகவைத்து எடுத்து வைத்துள்ள காய்கறிகளை அதில் போட்டு நன்றாக வதக்கவும்.

பின்னர், அதில் உப்பு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து ½ நிமிடம் வதக்கவும். பச்சை வாசனை இல்லாமல் வதங்கியதும் அடுப்பை அணைக்கவும். இப்போது, அந்த காய்கறிகளை ஆறவிடவும்.

Also Read | உடல் எடையை குறைக்க உதவும் சம்பா கோதுமை ரவை கிச்சடி!

உலர்ந்த காய்கறிகளை இப்போது இட்லி மாவுடன் கலக்கவும். இப்போது, இட்லி அச்சுகளில் எண்ணெய் தடவி மாவை ஊற்றவும்.

top videos

    8 முதல் 10 நிமிடங்கள் வரை குக்கரில் ஆவியில் வேகவைக்கவும். 10 நிமிடம் கழித்து குக்கரை திறந்தால், மென்மையான காய்கறி இட்லி தயார். இதை, சுட சுட சட்னி மற்றும் சாம்பார் உடன் பரிமாறவும்.

    First published:

    Tags: Food, Food recipes, Idly podi