முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பூரியை ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.!

பூரியை ஒருமுறை இப்படி செஞ்சு கொடுங்க.. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.!

குஜராத்தி ஸ்டைல் மசாலா பூரி வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

குஜராத்தி ஸ்டைல் மசாலா பூரி வீட்டிலேயே செய்யலாம் வாங்க!

உங்கள் குழந்தைகளுக்கு ஒரு முறை பூரியை இப்படி செய்து கொடுங்க. ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

பூரி - கிழங்கு நம்மில் பலருக்கும் பிடித்த காலை உணவில் ஒன்று. எண்ணெய் உணவாக இருந்தாலும் இவற்றை நாம் சப்புக்கொட்டி சாப்பிடுவதை நிறுத்துவதில்லை. ஏனென்றால், அதன் சுவை அப்படி…

அப்படி அனைவருக்கும் பிடித்த பூரியை எப்பவும் போல செய்யாமல் அதன் சுவையை அதிகரித்து சற்று வித்தியாசமாக செய்ய எப்போதாவது நீங்க யோசித்தது உண்டா?.

குஜராத்தி ஸ்டைலில் இஞ்சி, மிளகாய், ஓமம் என மசாலா பொருட்கள் சேர்த்து சற்று வித்தியாசமான சுவையில் பூரி சுடுவது எப்படி என நாங்கள் கூறுகிறோம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு – 2 கப்.

ரவை – 1/2 கப்.

கடலை மாவு – 1/2 கப்.

இஞ்சி, பச்சை மிளகாய் விழுது – 1 ஸ்பூன்.

சீரகப்பொடி – 1/2 ஸ்பூன்.

தனியா பொடி – 1/2 ஸ்பூன்.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

கரம் மசாலா – 1/2 ஸ்பூன்.

மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்.

மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்.

சீரகம் – 1/2 ஸ்பூன்.

ஓமம் – 1/2 ஸ்பூன்.

கஸ்தூரி மேத்தி – 1/2 ஸ்பூன்.

கொத்தமல்லி தழை - ஒரு கொத்து.

செய்முறை :

முதலில், பூரி செய்ய எடுத்துக்கொண்ட கோதுமை மாவு, கடலை மாவு ஆகியவற்றை ஒரு சல்லடையில் சலித்து தூசி நீக்கி சுத்தம் செய்துக்கொள்ளவும். இப்போது, எடுத்து வைத்துள்ள இஞ்சி மற்றும் பச்சை மிளகாவை ஒரு மிக்சி ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் நன்றாக அரைத்துக்கொள்ளவும்.

இதை தொடர்ந்து, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து சூடேற்றுங்கள். இதில், அரை கப் ரவை சேர்த்து, பொன்னிறமாக வறுத்து தனியே ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

தற்போது இந்த பாத்திரத்தில், சலித்து வைத்த மாவு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, சீரகப்பொடி, தனியாப்பொடி, கரம் மசாலா, சீரகம், ஓமம், கஸ்தூரி மேத்தி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்துக்கொள்ளவும்.

Also Read | குழந்தைகளுக்கு பிடித்த பனீர் ஃப்ரைட் ரைஸ் செய்யலாமா..?

தொடர்ந்து இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு மற்றும் இரண்டு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தொடர்ந்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்திற்கு மாவினை பிசைந்து 30 நிமிடத்திற்கு ஊற வைக்கவும்.

பூரி சுட்டு எடுக்க கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் நன்கு கொதிக்கும் நிலையில் இதில் பூரி மாவினை தட்டையாக உருட்டி போட்டு, சுட்டு எடுக்க மசாலா பூரி தயார்.

top videos

    மசாலா பொருட்கள் சேர்த்து தயார் செய்த இந்த பூரியினை நாம் அப்படியே சாப்பிடலாம். விருப்பம் உள்ளவர்கள் உங்கள் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் சட்னி, கிழங்கு மற்றும் சாம்பார் சேர்த்து இந்த பூரியை பரிமாறலாம்.

    First published:

    Tags: Breakfast, Food recipes