முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இனி வீட்டிலேயே செய்யலாம் குழந்தைகளுக்கு பிடித்த மாம்பழ ப்ரூட்டி.. இதோ ரெசிபி!

இனி வீட்டிலேயே செய்யலாம் குழந்தைகளுக்கு பிடித்த மாம்பழ ப்ரூட்டி.. இதோ ரெசிபி!

வீட்டிலேயே தித்திக்கும் மாம்பழ ப்ரூட்டி செய்வது எப்படி?

வீட்டிலேயே தித்திக்கும் மாம்பழ ப்ரூட்டி செய்வது எப்படி?

how to make frooti mango drink | வெயில் தாக்கத்தை தணிக்க உங்கள் வீட்டு குழந்தைகளுக்கு வீட்டிலேயே சுவையான மேங்கோ ப்ரூட்டி செய்து கொடுங்க. ப்ரூட்டி செய்வது எப்படி என நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

முக்கனிகளில் ஒன்றான மாம்பழத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. சுவை, மனம், நிறம் என அனைத்திலும் சிறந்தது மாம்பழம். மாம்பழம் சீசன் இல்லாத போது நாம் பெரும்பாலும் காசு கைகொடுத்து கடைகளில் ப்ரூட்டி வாங்கி குடுத்து மாம்பழம் சாப்பிடும் ஆசையை தீர்த்து கொள்வோம்.

தற்போது மாம்பழ சீசன்… உங்கள் குழந்தைகளுக்கு வெறுமனே மாம்பழத்தை வெட்டி கொடுக்காமல், மாம்பழ ப்ரூட்டியாக செய்து கொடுங்கள். வீட்டிலேயே எளிமையான முறையில் மாம்பழ ப்ரூட்டி செய்வது எப்படி என இந்த தொகுப்பில் நாங்கள் கூறுகிறோம்.

தேவையான பொருட்கள் :

அல்போன்சா மாம்பழம் - 3.

மாங்காய் - 1 கப்.

சர்க்கரை - 1 கப் (250 கிராம்).

தண்ணீர் - 1 லிட்டர்.

செய்முறை:

முதலில் மாம்பழத்தை நகு கழுவி தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். அதே போல, மாங்காயையும் தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

Also Read | வெள்ளரிக்காயை இப்படி சாப்பிட்டால் ஒரே வாரத்தில் உடல் எடையை குறைக்கலாம்..!

இப்போது, ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாம்பழம், மாங்காய், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் 15 நிமிடம் வேகவிடவும்.

பின்பு இதை வடிகட்டி நன்கு ஆறவிடவும். இதையடுத்து, வேகவைத்த மாம்பழத்தை மிக்சி ஜாரில் போட்டு விழுதாக அரைத்து கொள்ளவும்.

பின்பு மாம்பழம் வேகவைத்த தண்ணீரில் அரைத்த மாம்பழ விழுதை சேர்த்து நன்கு கலந்துவிடவும்.

பிறகு மறுபடியும் கலந்த வைத்த மாம்பழ கலவையை வடிகட்டி, ஒரு கிளாசில் ஊற்றினால் அருமையான மாம்பழ ப்ரூட்டி தயார்.

First published:

Tags: Food, Food recipes, Mango, Summer Fruits