முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / வெறும் 10 நிமிடம் போதும் காலை உணவுக்கு ஏற்ற முட்டை சான்விட்ச் செய்யலாம்!

வெறும் 10 நிமிடம் போதும் காலை உணவுக்கு ஏற்ற முட்டை சான்விட்ச் செய்யலாம்!

காலை உணவுக்கு ஏற்ற சுவையான முட்டை சான்விட்ச் செய்முறை!

காலை உணவுக்கு ஏற்ற சுவையான முட்டை சான்விட்ச் செய்முறை!

உங்கள் குழந்தைகள் ரசித்து உண்ணும் முட்டை சான்விட்ச் செய்ய வெறும் 10 நிமிடம் போதும். இது புரதம் நிறைந்த உணவு.

  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்த விறுவிறுப்பான காலத்தில், நம்மில் பலருக்கு சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் நேரம் இருப்பதில்லை. ஆனால், உடல் ஆரோக்கியத்திற்கு நாம் ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில், நெடியில் செய்யக்கூடிய புரதம் நிறைந்த ஒரு காலை உணவுக்கான ரெசிபி பற்றி நாங்கள் கூறப்போகிறோம்.

பிரட் துண்டுகளுக்கு இடையில் முட்டை மற்றும் காய்கறிகள் சேர்த்து தயாரிக்கப்படும் முட்டை சான்விட்ச் உங்கள் மாலை நேர பசியை போக்கும் சிறந்த உணவு ஆகும். இந்த சான்விட்ச்-னை எளிமையான முறையில் செய்வது எப்படி என இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டை - 6.

பிரட் துண்டுகள் - 6.

எண்ணெய் - 6 ஸ்பூன்.

கடுகு பேஸ்ட் - 1 ஸ்பூன்.

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.

மயோனெய்சு - 1/2 கப்.

லாக்டேசு இலை - 3.

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

சான்விட்ச் செய்வதற்கு முன்னதாக, 6 முட்டைகளை ஒரு பாத்திரத்தில் தண்ணீருடன் சேர்த்து அவித்துக்கொள்ளவும். பின்னர் அவித்த இந்த முட்டைகளை ஓடு நீக்கி, தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும்.

சான்விட்ச் ஃபில்லரை தயார் செய்ய, அடுப்பில் கடாய் ஒன்று வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும், அதில் அவித்த முட்டைகளை பொடியாக நறுக்கி சேர்த்து வறுக்க வேண்டும்.

தொடர்ந்து இதனுடன் மிளகு பொடி மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும். காரம் அதிகம் விரும்புவோர் மிளகு பொடியை சற்று அதிகமாக சேர்த்து, 5 நிமிடம் வேக விட்டு அடுப்பை அணைத்துவிடவும்.

பின்னர் இந்த சேர்மத்தை ஒரு கோப்பைக்கு மாற்றிக்கொள்ளவும். தொடர்ந்து இதனுடன் மயோனெய்சு மற்றும் கடுகு பேஸ்ட் சேர்த்தது நன்கு கிளறிக்கொள்ளவும்.

Also Read | தினமும் 1 டம்ளர் மோர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

இதனிடையே பிரட் டோஸ்ட்டர் கொண்டு பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்துக்கொள்ளவும். டோஸ்டர் இல்லாவிடில், தோசை தவாவில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பிரட் துண்டுகளை டோஸ்ட் செய்துக்கொள்ளலாம்.

டோஸ்ட் செய்யப்பட்ட இந்த பிரட் துண்டுகளுக்கு மேல், லாக்டேசு இலை மற்றும் நாம் தயார் செய்து வைத்த சான்விட்ச் ஃபில்லரை(முட்டை கலவை) வைக்கவும். தொடர்ந்து அதற்கு மேல் மற்றொரு பிரட் வைக்க முட்டை சான்ட்விச் தயார்.

நாம் தயார் செய்த சான்விட்சின் சுவையை கூட்ட, பிரட் துண்டுகளுக்கு இடையில் வெங்காயம் மற்றும் நறுக்கப்பட்ட முட்டைகோஸ் சேர்த்துக்கொள்ளலாம். பின்னர் தக்காளி சாஸ் உடன் சேர்ந்து இந்த சான்விட்சினை சுவையாக பரிமாறலாம்.

First published:

Tags: Egg recipes, Food, Food recipes