முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / சண்டே ஸ்பெஷல் : மும்பை ஸ்டைல் புதினா சிக்கன் கிரேவி செய்யலாமா?

சண்டே ஸ்பெஷல் : மும்பை ஸ்டைல் புதினா சிக்கன் கிரேவி செய்யலாமா?

தாபா ஸ்டைல் புதினா சிக்கன்

தாபா ஸ்டைல் புதினா சிக்கன்

Mint Chicken Curry Recipe In Tamil | சிக்கன் வைத்து இந்தவாரம் இந்த ரெசிபி செய்து, உங்கள் குடும்பத்தினரை அசைக்கவும்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

வீக்கெண்ட் என்றாலே அனைவரின் வீட்டிலும் அசைவ உணவுகளின் வாசனை மூக்கை துளைக்கும். அந்தவகையில், இந்தவாரம் உங்கள் வீட்டில் உள்ளவர்களை அசத்த புதினா சிக்கன் கிரேவி செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சிக்கனை ஊறவைக்க…

சிக்கன் - 1 கிலோ.

உப்பு - 2 ஸ்பூன்.

எலுமிச்சைபழச்சாறு - 1 பழத்தின் சாறு.

இஞ்சி பூண்டு விழுது - 4 ஸ்பூன்.

மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 3 ஸ்பூன்.

கரம் மசாலா தூள் - 1 1/2 ஸ்பூன்.

தயிர் - 3/4 கப்.

புதினா சிக்கன் கிரேவி செய்ய…

எண்ணெய் - 2 ஸ்பூன்.

நெய் - 1 ஸ்பூன்.

பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் - தாளிக்க.

வெங்காயம் - 3.

தண்ணீர் - 3/4 கப்.

பச்சை மிளகாய் - 5 நறுக்கியது.

புதினா இலை - 1 கப்.

கொத்தமல்லி இலை - ½ கப்.

மிளகு தூள் - 1/2 ஸ்பூன்.

செய்முறை :

முதலில் ரெசிப்பி செய்ய எடுத்து வைத்துள்ள சிக்கனை உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கழுவி எடுத்துக்கொள்ளவும்.

இதையடுத்து, சுத்தம் செய்த சிக்கனில் எலுமிச்சைபழச்சாறு, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள், தயிர் சேர்த்து நன்கு கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

இதற்கிடையில், ரெசிபி செய்ய எடுத்துக்கொண்ட வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சித்தம் செய்து மெல்லியதாக நறுக்கி வைக்கவும்.

அதே போல, புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளையும் நன்கு கழுவி இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்து வைக்கவும்.

Also Read | குடை மிளகாயை ஒரு முறை இப்படி சமைத்து கொடுங்க… குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க!

இப்போது, கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சீரகம் சேர்த்து தாளிக்கவும்.

பின்பு நறுக்கிய வெங்காயம் சேர்த்து 7 நிமிடம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதையடுத்து, ஊறவைத்த சிக்கன் துண்டுகளை அதில் சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிடவும்.

பின்பு, அதில் தேவைக்கு ஏற்ப தண்ணீர் சேர்த்து கலந்து கடாயை மூடி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.

இப்போது, மிக்ஸியில் பச்சை மிளகாய், புதினா இலை, கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி விழுதாக அரைக்கவும்.

பின்னர் அரைத்த புதினா கொத்தமல்லி விழுதை சிக்கனில் சேர்த்து கலந்து 5 நிமிடம் வேகவிடவும். பச்சை வாசனை மாறியதும் மிளகு தூள் சேர்த்து கலந்து அடுப்பை விட்டு இறக்க அட்டகாசமான புதினா சிக்கன் தயார்.

top videos

    இது, தோசை, பூரி, சப்பாத்தி, வெள்ளை சாதம் என அனைத்திற்கும் அட்டகாசமாக இருக்கும்.

    First published:

    Tags: Chicken recipe, Food, Food recipes, Punjabi chicken