முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மீன் குழம்பு செஞ்சிருப்பீங்க.. ஆனால் மீன் குருமா செஞ்சிருக்கீங்களா..? இதோ ரெசிபி..!

மீன் குழம்பு செஞ்சிருப்பீங்க.. ஆனால் மீன் குருமா செஞ்சிருக்கீங்களா..? இதோ ரெசிபி..!

தாபா ஸ்டைல் மீன் குருமா

தாபா ஸ்டைல் மீன் குருமா

Dhaba Style Fish Korma | ஒரு முறை உங்கள் வீட்டில் இருப்பவர்களுக்கு இப்படி மீன் குழம்பு செய்து கொடுங்க விரும்பி சாப்பிடுவாங்க.

  • Last Updated :
  • Tamil Nadu, India

நம்மில் பலர் சிக்கன் மற்றும் மட்டன் குருமாவை அடிக்கடி சாப்பிட்டிருப்போம். இந்த முறை ஏதாவது புதிதாக முயற்சி செய்ய நினைத்தால், உங்களுக்காக அருமையான ஃபிஷ் குருமா ரெசிபி பற்றி கூறுகிறோம்.

மீனுடன் சில மசாலா பொருட்களை சேர்த்து சுவையான தாபா ஸ்டைல் மீன் குருமா ஒன்றினை மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே எப்படி செய்வது என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

மீன் - 1 கிலோ.

வெங்காயம் - 2.

இஞ்சி_பூண்டு விழுது - 2 ஸ்பூன்.

பச்சை மிளகாய் விழுது - 1 ஸ்பூன்.

கொத்தமல்லி பொடி - 2 ஸ்பூன்.

மஞ்சள் - 1/2 ஸ்பூன்.

தயிர் - 1 கப்.

கரம் மசாலா - 1/2 ஸ்பூன்.

கிராம்பு - 4.

ஏலக்காய் - 4.

மிளகு - 6.

இலவங்கப்பட்டை - 1.

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :

முதலில் குருமா செய்வதற்கு எடுத்துக்கொண்ட வெங்காயம் மற்றும் மீன் துண்டுகளை சுத்தம் செய்து பின் பொடிப் பொடியாக நறுக்கி தனியாக எடுத்து வைக்கவும்.

இதையடுத்து, ஒரு பாத்திரத்தில் மீன் துண்டுகளுடன் மஞ்சள், எலுமிச்சை சாறு, உப்பு, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து 20 நிமிடத்திற்கு நன்கு ஊற வைக்கவும்.

தற்போது குருமா செய்ய பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்கு காய்ந்ததும் இதில் நறுக்கிய வெங்காயம், பட்டை, மிளகு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும்.

Also Read | குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பனீர் நகட்ஸ் செய்து அசத்துங்க..!

வெங்காயம் பொன்னிறமாக மாறியதும் இதில் தயிர் மற்றும் இஞ்சி - பூண்டு விழுது, பச்சை மிளகாய் விழுது, மல்லி பொடி, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.

சேர்மத்தின் பச்சை வாசம் மாறும் நிலையில், அதில் போதுமான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.

தண்ணீர் நன்கு கொதிக்கும் நிலையில் இதில் ஊற வைத்த மீன் சேர்மத்தை சேர்த்து, 3 நிமிடம் வேக வைத்து அடுப்பில் இருந்து இறக்கினால் சுவையான மீன் குருமா ரெடி.

இதை வெள்ளை சாதம், தோசை, சப்பாத்தி ஆகியவற்றுடன் பரிமாறினாள் அட்டகாசமாக இருக்கும்.

First published:

Tags: Fish, Fish Finger Recipe in Tamil, Food, Food recipes