முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மீந்த சாதத்தை வைத்து சுவையான ரைஸ் கட்லெட் செய்வது எப்படி..?

மீந்த சாதத்தை வைத்து சுவையான ரைஸ் கட்லெட் செய்வது எப்படி..?

ரைஸ் கட்லெட்

ரைஸ் கட்லெட்

மதியம் சாப்பிட்டு மீதம் உள்ள வெள்ளை சாதத்தை வைத்து மாலை தேநீருடன் சாப்பிட சுவையான ரைஸ் கட்லெட் செய்வது எப்படி என பார்க்கலாம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

அனைத்து வீட்டு இல்லத்தரசிகளுக்கும் இருக்கு ஒரே பிரச்சனை, மீந்த வெள்ளை சாதத்தை என்ன செய்வது என்பதுதான். நம்மில் பலர், மீதம் உள்ள சாதத்தை வைத்து வடகம், இட்லி மாவு என சில ரெசிபிக்களை செய்வோம். ஆனால், இதுவரை யாருங்க உங்களுக்கு கூறாத ஒரு சூப்பர் ரெசிபி பற்றி நாங்கள் கூறுகிறோம். அதுதான் ரைஸ் கட்லெட்….!

வீட்டில் உள்ளவர்கள் ஏதாவது ஸ்னாக்ஸ் கேக்கும் போது இதை செய்து கொடுத்தால், விரும்பி உண்பார்கள். குழைந்தை முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ரைஸ் கட்லெட் செய்வது எப்படி என பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வடித்த சாதம் - ஒரு கப்.

வேகவைத்து மசித்த சோளம் - அரை கப்.

மஞ்சள் - 1/4 தேக்கரண்டி.

உப்பு - தேவையான அளவு.

ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி.

பெரிய வெங்காயம் - 1.

பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்.

சிவப்பு மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி.

கொத்தமல்லி தூள் - 1/2 தேக்கரண்டி.

ரவை - 2 தேக்கரண்டி.

செய்முறை :

அடுப்பில் கடாய் ஒன்றினை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில், நறுக்கிய வெங்காயம், பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கிக்கொள்ளவும்.

தற்போது இதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், மசித்து வைத்த சோளம் மற்றும் உப்பு ஆகியவற்றை தேவையான அளவிற்கு சேர்த்து நன்கு கிளறி தனியே எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும். அதே போல எடுத்துக்கொண்ட ரவையையும் வறுத்து தனியே வைக்கவும்.

இப்போது ஒரு பாத்திரத்தில் வடித்த சாதத்தை எடுத்து நன்றாக மசித்துக்கொள்ளவும். பின்னர் இதனுடன் வறுத்து வைத்த ரவை மற்றும் வதக்கி வைத்த காய்கறி ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.

Also Read | சப்பாத்திக்கு ஏற்ற ஒரு சூப்பரான கடாய் முட்டை மசாலா செய்யலாமா?

தயாராக உள்ள இந்த கட்லெட் கலவையினை, சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக்கொள்ளவும். பின்னர் இதனை ஒரு தட்டில் தனியே எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.

இனி, கட்லெட்டினை பொரித்து எடுக்க, கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடேற்றுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் இந்த கட்லெட் உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்க ரைஸ் கட்லெட் ரெடி!

top videos

    வறுத்து எடுத்த ரைஸ் கட்லெட் துண்டுகளை சுட சுட தக்காளி கெட்ச்-அப் அல்லது உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு சட்னி வகையுடன் பரிமாற வேண்டியது தான். மாலையில் தேநீருடன் சேர்த்து சாப்பிட ஏற்றது.

    First published:

    Tags: Cooked Rice Benefits, Food, Food recipes