முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / தயிர் சாதத்திற்கு ஏற்ற சுவையான மாங்காய் ஊறுகாய் செய்ய ரெசிபி...

தயிர் சாதத்திற்கு ஏற்ற சுவையான மாங்காய் ஊறுகாய் செய்ய ரெசிபி...

பிராமின் வீட்டு ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

பிராமின் வீட்டு ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி?

mango pickle recipe in tamil | நமது பாட்டி செய்வது போல பாரம்பரிய முறையில் உங்கள் குடும்பத்தினருக்கு ஊறுகாய் செய்து கொடுக்கணுமா?. இதற்கான ரெசிபியை நாங்கள் கூறுகிறோம்.

  • Last Updated :
  • Tamil Nadu, India

ஊறுகாய் பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஏனெற்றால், பிடிக்காத அல்லது மோசமான உணவை கூட ஒரு ஸ்பூன் ஊறுகாய் இருந்தால் போதும். முழு உணவையும் சாப்பிட்டுவிடலாம். அதுவும் மாங்காய் ஊறுகாய் என்றாகி சொல்லவா வேண்டும்.

பாரம்பரிய முறையில், ஐயர் வீட்டு ஸ்டைலில் மாங்காய் ஊருகாய் செய்ய நினைத்தால், அதற்கான ரெசிபியை நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். இப்படி மாங்காய் ஊறுகாய் செய்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள்.

தேவையான பொருட்கள் :

மாங்காய் ஊறுகாய் செய்ய..

மாங்காய் - ¼ கிலோ.

கடுகு - 1 ஸ்பூன்.

வெந்தயம் - 1 ஸ்பூன்.

மிளகாய் தூள் - 4 ஸ்பூன்.

உப்பு - 2 ஸ்பூன்.

தாளிக்க…

நல்லெண்ணெய் - 1/2 கப்.

கடுகு - தேவையான அளவு.

பூண்டு - 10 பல்.

சிவப்பு மிளகாய் - 7.

பெருங்காய தூள் - 1/4 ஸ்பூன்.

கறிவேப்பிலை - 1 கொத்து.

செய்முறை :

எடுத்து வைத்துள்ள மாங்காயை நான்கு துண்டுகளாக அறுத்து, ஒரு டப்பாவில் போட்டு கல் உப்பு சேர்த்து 2 நாட்கள் ஊறவிடவும்.

இரண்டு நாட்கள் கழித்து அதில் தண்ணீர் ஊறியிருக்கும். அதிலிருந்து மாங்காயை மட்டும் எடுத்து 4 முதல் 5 மணிநேரம் வெயிலில் உலர்த்தவும்.

பின்னர் அந்த மங்காவை மீண்டும் அதே உப்பு தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் வைக்கவும். மீண்டும் மறுநாள் காலையில் வெயிலில் 2 மணி நேரம் உலர வைத்து எடுத்து சிறிய துடுகளாக வெட்டி தயாராக வைக்கவும்.

Also read | இனி ரவை வைத்து உப்புமா செய்யாதீங்க… இந்த புது ரெசிபியை ட்ரை பண்ணுங்க!

இப்போது, ஒரு கடாயில் கடுகு, வெந்தயம், சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும்.

பின்பு அதை நன்கு ஆறவிடவும். ஆறிய பிறகு அவற்றை மிக்ஸியில் சேர்த்து பொடியாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாங்காய், மிளகாய் தூள், அரைத்த கடுகு வெந்தய பொடியை சேர்த்து நன்கு கலக்கவும்.

ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய், கடுகு, பூண்டு, சிவப்பு மிளகாய் சேர்த்து பொரிய விடவும். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலை சேர்க்கவும். இந்த தாளிப்பை மாங்காய் ஊறுகாய் உடன் சேர்த்து நன்கு கலந்து விட அட்டகாசமான மாங்காய் ஊறுகாய் தயார்.

First published:

Tags: Food, Food recipes, Mango, Pickle